கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையில் நிலவும் ஆளனி மற்றும் பௌதீகவள பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து அப்பிரதேச மக்களுக்கு சிறந்த வைத்திய சேவையினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூதூர் பிரதேச சபை உப தவிசாளர் சி.துரைநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று(17) இடம்பெற்ற சபை அமர்வில் தனிநபர் பிரேரனையை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலையானது சுமார் பதினைந்திற்கும் மேற்பட்ட கிராம மக்களின் சுகாதார சேவையினை பூர்த்தி செய்யும் முகமாக ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றது இங்கு நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் அதிகமான வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றார்கள் எனினும் இவ் வைத்தியசாலையில் நிலவும் ஆளனி மற்றும் பௌதீகவள பற்றாக்குறையின் காரணமாக நோயாளிகள் தங்களுக்குத் தேவையான சுகாதார தேவையினை பூர்த்தி செய்து கொள்வதில் பல சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றார்கள். குறிப்பாக இவ் வைத்தியசாலையில் இரண்டு வைத்தியர்களுக்கான ஆளனி வெற்றிடம் நிலவுகின்றபோதும் ஒரேயொரு வைத்தியர் மாத்திரமே கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றார். அவர் விடுமுறையில் செல்கின்றபோது பதில் கடமை இல்லாத காரணத்தினால் இவ் வைத்தியசாலையை நம்பி வருகின்ற நோயாளிகள் திரும்பி வேறு வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவது மாத்திரமல்லாது சிலவேளைகளில் பல உயிரிழப்புக்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றார்கள்.
இவ் வைத்தியசாலைக்கான ஆளனி வெற்றிடம் 19ஆக இருக்கின்றபோதும் இதுவரைக்கும் பல வெற்றிடங்கள் நிரப்பப்படாமலே இருக்கின்றமையானது கவலையளிக்கின்றது. அத்துடன் இங்கு காணப்படுகின்ற பௌதீக வளங்களும் போதுமானதாக இல்லை இருக்கின்ற வளங்களும் பயன்படுத்த முடியாமலும் பழுதடைந்த நிலையிலுமே காணப்படுகின்றன. எனவே கூடிய விரைவில் இவ் வைத்தியசாலைக்கு மேலும் ஒரு வைத்தியரை நியமித்து அத்தியாவசியமான பௌதீக வழங்களை வழங்கி இவ் வைத்தியசாலையை நம்பி இருக்கின்ற மக்கள் சிறந்த சுகாதார சேவையினை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிராந்திய மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணியகம் உட்பட சம்பந்தப்பட்ட தரப்புகளை கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

0 comments :
Post a Comment