எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை மீரா விளையாட்டுக் கழக கிரிக்கெட் அணியினரின் சீருடை அறிமுக போட்டி மாஞ்சோலை அல் ஹிரா வித்தியாலய மைதானத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்றது.
மீராவோடை மீரா, மாஞ்சோலை அஸ் சபா ஆகிய இரண்டு அணிகளுக்குமிடையில் நடைபெற்ற பதினைந்து ஓவர்களைக் கொண்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய அஸ் சபா அணியினர் பதினைந்து ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுக்களை இழந்து 213 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மீரா அணியினர் 12 ஓவரில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 75 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.
இப் போட்டியில் வெற்றி பெற்ற அஸ் சபா அணிக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர் அவர்களினால் கிண்ணம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment