ஐக்கிய மக்கள் சக்தியினால் வாக்குறுதி வழங்கப்பட்ட தேசிய பட்டியல் விவகாரம் உச்சம் தொட்டு இருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்க வேண்டிய தேசிய பட்டியல் ஆசனத்தை ஐக்கிய மக்கள் சக்தியினால் வழங்குவதில் பாரிய இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.
அந்தடிப்படையில் தேசிய பட்டியல் ஆசனத்தை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு பெறும் முயற்சியில் முதல் கட்டமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் எச்.எம்.எம் ஹரீஸ் ஆகியோர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக இன்று காலை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் காரியாலயத்தில் அதன் தலைவர் சஜித் பிரேமதாசாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று அது முழுமையாக நிறைவடையாமல் இது பற்றி இன்று மாலை இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்த முஸ்லிம் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
0 comments :
Post a Comment