அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த தட்டுப்பாட்டினை நிவர்த்திக்கும் நோக்கில் அட்டாளைச்சேனை அல் - நஜா விளையாட்டுக்கு கழகத்திடம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக மாபெரும் இரத்ததான நிகழ்வை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அல் - நஜா விளையாட்டுக்கு கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் தெரிவித்தார்.
சமூக சேவைகளின் முன்னோடியாகத் திகழ்கின்ற அட்டாளைச்சேனை அல் - நஜா விளையாட்டுக் கழகம் மற்றும் அல் - நஜா சமூக சேவை அமைப்பு ஆகியன அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவுடன் இணைந்து இந்த மாபெரும் இரத்ததான முகாம் ஒன்றினை எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 தொடக்கம் மாலை 4.00 மணி வரை அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவில் அமைந்துள்ள அல் - நஜா விளையாட்டுக் கழக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இம்மாபெரும் இரத்ததான முகாமில் அனைத்து விளையாட்டுக் கழக வீரர்கள், பொது அமைப்புக்களின் உறுப்பிர்கள், சமூக சேவை மற்றும் தொண்டு நிறுவனங்களின் உறுப்பிர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பெறுமதியான உதிரத்தை தானமாக வழங்கி எம் சகோதரர்களின் உயிரைக் காக்க முன்வருமாறும்
அல் - நஜா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இத்ரீஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment