கொரோனா நோய் காரணமாக மூடப்பட்டிருந்த ஏறாவூர் செய்னுலாப்தீன் ஆலிம் வாவிக்கரைப்பூங்கா மீள்திறப்பு நேற்று 16.08.2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண முன்னாள் முதல்வரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் அல்ஹாபிழ் நஷீர் அஹமட் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துத்தெரிவிக்கையில்,
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் சிறுபான்மையினருக்கு சம உரிமை வழங்கியதன் மூலம் அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் நாட்டுக்காக உழைத்து வெற்றியும் கண்டனர். அதன் மூலமமே அந்நாட்டின் தலைவர்கள் என்றும் போற்றப்படுகின்றனர்.
மட்டு.மாவட்டத்தின் எழுச்சிக்காக மாத்திரமல்லாமல், முழு நாட்டின் எழுச்சிக்காகவும் எனது பணி தொடரும். மட்டு.மாவட்டத்தில் எதிர்வரும் ஐந்து வருடத்திற்குள் தனியார்த்துறையில் அதிகமான வேலைவாய்ப்புகளை தமிழ், முஸ்லிம் இன பேதம் பாராமல் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு தமிழ்த்தலைமைகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் நாம் அரசியலில் அநாதையாக்கப்பட்டு விடுவோமா? என்ற பாரிய அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த அச்சத்துக்கு வெகு விரைவில் முற்றுப்புள்ளி வைப்பேன்.
அரசியல் காலத்தில் தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் யாவும் தொடராக நிறைவேற்றப்படும். இதை யாரும் தடுக்க முடியாது. தற்போது சிலருக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகம் அடக்கப்பட்டு விடும் என்று யாரும் நினைத்துவிடக்கூடாது.
அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினராக நான் ஒரு போதும் இருக்கப்போவதில்லை என மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment