காரைதீவின் கணிப்பு கலாநிதி கணேஸின்மீது கமழ்கிறது! வேட்பாளர் கணேஸின் கூட்டத்தில் பேச்சாளர் ஜெயசிறில் .


காரைதீவு நிருபர் சகா-
ம்பாறை மாவட்டமெங்கும் கலாநிதி கணேசின் பெயர்தான் பரவலாக அடிபடுகின்றது. தமிழர்தரப்பில் வரக்கூடிய ஆளுமை.தகுதியானவர். மும்மொழியிலும் துறைபோனவர் என்றெல்லாம் பேசப்படுகிறது.இந்நிலையில் காரைதீவின் கணிப்பும் அவர்மீதுதான் வீசுகிறது. வெற்றி நிச்சயமாகிவிட்டது. எனவே நாமும் பார்வையாளராக இல்லாமல் பங்காளிகளாவோம்.

இவ்வாறு காரைதீவில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் திகாமடுல்ல வேட்பாளர் கலாநிதி செல்வராஜா கணேஸை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் உரையாற்றிய காரைதீவு பிரதேசசபைத்தவிசாளரும் கட்சியின் மாவட்ட பேச்சாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் குறிப்பிட்டார்.
குறித்த கூட்டம் நேற்று த.தே.கூட்டமைப்பு இளைஞரணி பிரமுகர் சட்டமானி அருள்.நிதான்சன் தலைமையில் நடைபெற்றது.

அங்கு பேச்சாளர் ஜெயசிறில்மேலும் உரையாற்றியதாவது:

நிந்தவூரில் தவப்பிரியாவை தாக்கப்பட்டார். தவப்பிரியாவை ஆஸ்பத்திரியில் பார்த்துவிட்டு தாக்கியவனை தண்ணியில்லாக் காட்டுக்கு மாற்றுகிறேன் என்று ஊடகங்களுக்கு அறிக்கைவிட்டு விளம்பரம் தேடியதுதான் மிச்சம். தவப்பிரியா இடம்மாற்றப்பட்டாரே தவிர தாக்கிய கயவன் இன்னும் அதே அலுவலகத்தில்தான வேலை செய்கிறான்.
அந்த வழக்கிற்கு இந்த சிறில்தான் செல்லவேண்டும். அதேபோல அட்டப்பள மயானப்பிரச்சினைக்கும் எங்கிருந்தோ எல்லாம் பறவைபோல் வந்தார்கள். இன்று அவ்விவகாரம் நீதிமன்றில். அதற்கும் இந்த சிறில்தான் செல்லவேண்டும்.
திராய்க்கேணியில் தமிழ்யுவதிகளை நிவாரணம் தருவதாகக்கூறி ஏமாற்றினார்கள். அங்கும் இந்த சிறில்தான் செல்லவேண்டும்.

தமிழ் வாக்குகளை மாற்றினத்திற்கு விற்பதற்கு சில தரகர்கள் புறப்பட்டுள்ளனர். காரைதீவை பூர்வீகமாகக்கொள்ளாதவர்களும் பணத்திற்காக கட்சிதாவும் புல்லுருவிகளுமே இவ்ஈனச் செயலில் ஈடுபடுகின்றனர். உடனடியாக அவர்கள் திருந்தவேண்டும். இன்றேல் துரத்தப்படுவார்கள். இது வீரம் செறிந்த வித்தியமண்.

இன்று அரசின் ஏஜண்டுகள் சிலர் தொழில்தருகிறோம் அபிவிருத்தி செய்கிறோம் என்றுகூறிக்கொண்டு தமிழ்க்கிராமங்களுள் நுழைகிறார்கள்.காரைதீவுக்குள் 400படிவங்களை வழங்கி கூட்டியும் கொடுத்துள்ளார்கள். இவ்வளவுகாலமும் இல்லாத அக்கறை இன்று அவர்களுக்கு. அதற்கு சில தமிழ்ப்புல்லுருவிகள் துணைபோகின்றார்கள்.சன்மானங்களுக்கான தரகர்கள்.

இவ்வளவுநாளும் கண்ணுக்குத் தெரியாத தமிழ்இளைஞர்கள் யுவதிகள் தற்போதுதான் தெரிகின்றார்கள் அவர்களுக்கு. இதுவரை யாருக்கு இவர்கள் தொழில் கொடுத்துள்ளார்கள்?
சிறியாணி என்பவருடன் திரிபவர்கள் பல அபிவிருத்திகளை செய்துதருவதாகவும் தொழில்பெற்றுத்தருவதாகவும் படிவங்கள் விநியோகிக்கிறார்களாம். இவ்வளவு கதைக்கும் அவர் இதுவரை காரைதீவுக்கு ஒதுக்கியது ஆக 20ஆயிரம் ருபா மட்டுமே. இன்னமுமா இவர்களை நம்புகிறீர்கள்? அவர்களை இனங்கண்டு விரட்டியடிக்கவேண்டும். அவர்கள் தமிழ் விரோதிகள் அல்ல துரோகிகள். இம்முறை வரலாற்றில் முதல்தடவையாக கல்முனைத் தொகுதியிலிருந்து ஓர வேட்பாளர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகவுள்ளார். அதற்கு எனவே தமிழ்மக்களோடு என்றும் நிற்கும் வீட்டுச்சின்னத்திற்கும் 10ஆம் இலக்கத்திற்கும் வாக்களித்து இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். என்றார். வேட்பாளர் கணேஸூம் உரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :