அம்பாறை தமிழர்களை ஒருகுடையின்கீழ் கொணர்வதே எனது முதல்பணி- த.தே.கூ தேசியப்பட்டியல் கலையரசன்

ம்பாறை தமிழர்களை ஒருகுடையின்கீழ் கொணர்வதே எனது முதல்பணி!
த.தே.கூட்டமைப்பு தேசியபட்டியல் எம்.பியாகும் த.கலையரசன் கூறுகிறார்.
(காரைதீவு சகா)
சிதறுண்டு போய்க்கிடக்கும் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களை ஓரணியில் திரட்டி ஒரு குடையின்கீழ் கொண்டுவருவதே எனது முதல் பணியாகவிருக்கும்.

இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகும் நாவிதன்வெளிப்பிரதேசசபைத்தவிசாளர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

தேசியபட்டியல் எம்.பியாக நியமனம் பெற்றபின் அவர் கருத்துத்தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்:

எனக்கும் எமது கட்சிக்கும் வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தேர்தலில் தமிழ்ப்பிரதிநிதித்துவத்தை பறிகொடுத்து கவலையுடன் நிர்க்கதியாய் நின்றவேளை இந்நியமனத்தை எனக்குவழங்க சிபார்சுசெய்த கட்சித்தலைமைகளுக்கும் ஏனையோருக்கும் நன்றிகள்.

அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் இரு சமுகங்களாலும் நசுக்குண்டு அரசியல் அநாதைகளாய் இருக்கின்றனர். அவர்களை ஒன்றுதிரட்டி ஓரணியின்கீழ்கொண்டுவந்து மக்கள் பணி செய்யமுதலில் திட்டமிட்டுள்ளேன்.

பலவழிகளாலும் பின்தங்கியுள்ள எமது தமிழ்ப்பிரதேசங்களையும் மக்களையும் அபிவிருத்தி செய்வதில் அதிக அக்கறை காட்டுவேன். அவ்வண்ணம் செயற்பட்டு முன்னுதாரணமான மாவட்டமாக மிளிரச்செய்வேன்.

எமது கட்சி வடக்கு கிழக்கில் எட்டு மாவட்டங்களிலும் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.எமது சகோதரர்கள் பிரிந்துநின்று செயற்பட்டுள்ளனர். அவர்களையும் ஒன்றிணைக்கவேண்டியதேவையுள்ளது.

மாற்றுக்கட்சிகளில் இயங்கிய எமது சகோதரர்களை எதிரியாக பார்க்கமாட்டேன். எல்லோரையும் அரவணைத்து பயணிப்பேன். உரிமையுடன்கூடிய அபிவிருத்தியை முன்கொண்டுசெல்ல அனைவரும் எனக்கு ஒத்துழைக்கவேண்டும். என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :