திருகோணமலை மாவட்டத்தில் தெரிவானோர் விபரம்.

எப்.முபாரக்-


நாடாளுமன்றத் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகளின் பிரகாரம் திருகோணமலை மாவட்டத்தில் 39 ஆயிரத்து 570 வாக்குகளைப் பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) ஓர் ஆசனத்தை இம்முறையும் தக்கவைத்துள்ளது.

86 ஆயிரத்து 394 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. அதேவேளை, 68 ஆயிரத்து 681 வாக்குகளைப் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஓர் ஆசனத்தைப் பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை சிங்கள மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகரித்திருந்தது. அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கடந்த முறையையும் விட இம்முறை அதிக வாக்குகள் கிடைத்துள்ளன. கடந்த முறை 38 ஆயிரத்து 463 வாக்குகளை (ஆசனம் 1) ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பெற்றிருந்தது.

இதேவேளை அங்கு இம்முறை சில மாற்றுக்கட்சிகள் (தமிழ்க் கட்சிகள்) போட்டியிட்டதால் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி கடந்த முறை 45 ஆயிரத்து 894 வாக்குகளைப் (ஆசனம் 1) பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடந்த முறை 83 ஆயிரத்து 638 வாக்குகளைப் பெற்று (ஆசனம் 2) பெற்றிருந்த ஐக்கிய மக்கள் சக்தி இம்முறை 2 ஆயிரத்து 756 வாக்குகளை மேலதிகமாகப்பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையில் கபில நுவான் அத்துக்கோரல 30,056 வாக்குகளையும்,ஐக்கிய மக்கள் சக்தியில் எம்.எஸ்.தௌபீக் 43,759 வாக்குகளையும்,இம்ரான் மஹ்ரூப் 39,029 வாக்குகளையும், இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் இரா.சம்பந்தன் 21422வாக்குகளையும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :