தமிழர் வாழ்வில் விடிவெள்ளியாக வினோகாந்த்.


யுத்தத்தாலும் இன்னோரன்ன இனவன்மங்களாலும் சுனாமியாலும்
முற்றாகப்பாதிக்கப்பட்ட எனதினிய தமிழினத்திற்கு சமகாலதேவையாக இருப்பது ஜக்கிய மக்கள் சக்தி கட்சியில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் ஒரேயொரு தமிழ் வேட்பாளர் வெள்ளையன் வினோகாந்த் இவ்வாறு கூறுகிறார்.
அம்பாறை மிஹிந்துபுரவில் நான்கு சகோதரர்களோடு 1982இல் பிறந்து 1990 வன்செயலில் இடம்பெயர்ந்து காரைதீவில் நான்கு வருடங்கள் அகதிவாழ்க்கை வாழ்ந்து 1994இல் புதியவளத்தாப்பிட்டியில் குடியேறி வாழ்ந்துவரும் திரு.வினோகாந்த் அமைச்சர்களுடன் இணைந்து பல்லாண்டுகாலம் சேவை மற்றும் அபிவிருத்திச்செய்றபாடுகளில் ஈடுபட்டுவந்த ஓர் இளம் அரசியலாளர்.
ஏழைகளுக்கு அளப்பரிய சேவையாற்றி மக்கள்மனங்களில் நீங்காஇடம்பிடித்த முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச மற்றும் அவரது மகன் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ வழியில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களுக்காக
சேவைசெய்யப் புறப்பட்ட இளம்தலைவர் வினோகாந்த். அவருக்கு ஆதரவளிப்பதன் மூலம் உங்களையும் உங்கள் பிரதேசத்தையும் வளப்படுத்திக்கொள்ளலாம் இவ்வாறு ஒரு அங்கீகாரம் வழங்கியுள்ளார் அம்பாறைமாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பி.தயாரத்னா.

ஜக்கிய தேசியக்கட்சியிலிருந்து பிரிந்த சஜித் தலைமையிலான ஜக்கிய மக்கள் சக்தி கட்சியில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் ஒரேயொரு தமிழ் வேட்பாளர் வெள்ளையன் வினோகாந்த்..அவருடன் ஆறு முஸ்லிம்வேட்பாளர்களும்
மூன்று சிங்கள வேட்பாளர்களும் களத்தில் குதித்துள்ளனர்.
மூன்று மொழிகளிலும் பாண்டியத்தியம்பெற்ற அனுபவம் வாய்ந்த இளம் வேட்பாளர் வெ.வினோகாந்த் எமது வாசகர்களுக்காக இந்தச் செவ்வியை வழங்கினார். அவருடனான செவ்வி இதோ: 

வினா: அரசியல்வாதிகள் படித்தவர்களாக இருக்கவேண்டும் என்று கூறப்படுகின்ற இந்தகாலகட்டத்தில் தங்கள் கல்விப்பின்புலத்தை முதலில் கூறுங்கள்?
விடை: நான் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் பயின்றவன்.பின்பு கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடகடிப்ளொமா பாடநெறியை பூர்த்திசெய்து திருகோணமலை தொழினுட்பக்கல்லூரியில் என்சிரி.(சிவில்) பாடநெறியை முடித்தேன்.
அதன்பலனாக சூரியன் எவ்.எம். மற்றும் ருபவாஹினி சனல் ஜ யிலும்
பணியாற்றக்கிடைத்தது.
வினா: மும்மொழி ஆற்றலுள்ள தங்களின் அரசியல் பிரவேசம் பற்றிக்கூறுங்கள்?
விடை: 2005இல் அமைச்சர்களின் சேவையில் சற்று உந்தப்பட்டேன்.
அம்hபாறையிலிருந்த பிரபல அமைச்சரின் வேண்டுகோளின்பேரில் 2011 மற்றும் 2015 தேர்தல்களில் உணர்வுபூர்வமாகச்செயற்பட்டேன். அதன்பலனாக விவசாயஅமைச்சிலும் பெற்றோலியவளத்துறை அமைச்சிலும் மாவட்ட இணைப்பாளராக சேவையாற்றமுடிந்தது.

வினா: தங்கள் இதற்கு முன் மக்களுக்கு சேவையாற்றியிருந்தால் அது பற்றிக்கூறுங்கள்?
விடை: நான் முதலில் 'ஹபிற்றாற்' என்ற அரசசார்பற்ற நிறுவனத்தில்
சேவையாற்றினேன். வடக்கு கிழக்கில் சுமார் 1000வீடுகளைக்
கட்டிக்கொடுக்கும் பணியிலீடுபட்டேன். எமது மாவட்டத்தில் தொடர்சேவைசெய்ய ஆசைப்பட்டேன்.மேலும் அமைச்சருடன் இணைந்து ஆலயம் வீதி மைதானம் பாடசாலை அபிவிருத்திக்கும் சமுர்த்தி பயனாளிகளை மும்மடங்காக்கி அவர்களைத்தெரிவுசெய்து வழங்கியதில் பாரிய பங்கு எனக்குண்டு.
வினா: முன்அனுபவமுள்ள நீங்கள் தற்போது சஜித் அணியில் வந்ததன் காரணம் என்ன?
விடை: நான் இளமையிலிருந்து அமரர் பிரேமதாசவின் சேவையில் கவரப்பட்டேன். ஏழைகளின் தோழன். அவரது வீடமைப்புத்திட்டத்தின் மகத்துவம் வாய்ந்தது.
அவரது புதல்வன் தலைவர் சஜித்பிரேமதாச அதே பாணியில் சேவைசெய்துவருகிறார். கடந்த ஜனாதிபதித்தேர்தலில் 90வீத தமிழ்மக்கள் எமது தலைவர் சஜித்பிரேமதாசவுக்கே வாக்களித்தனர். இன்றும் அம்மக்கள் சோர்ந்துபோகாமல் தலைவர் சஜித்தின்மீது நம்பிக்கைவைத்து பிரதமராக அழகுபார்க்க எண்ணுகின்றனர். அவர் என்னை அழைத்து தேர்தலில் நிற்குமாறு கேட்டதும்
நானடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. நான் எந்ததுறையில் ஆசைப்பட்டேனோ அந்ததுறையில் அதுவும் நான்விரும்பிய நேசிக்கும் தலைவன் சஜித் அழைத்ததை ஒரு பாக்கியமாகக்கருதி இணக்கம்தெரிவித்தேன்.
கேள்வி: தங்கள் ஜ.ம.சக்தி அணியில் 6முஸ்லிம் வேட்பாளர்களும்
3சிங்களவேட்பாளர்களும் போட்டியிடுகின்றனரே இந்நிலையில் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?

விடை: நிச்சயமாக.எனது வெற்றி உறுதிசெய்யப்பட்ட வெற்றி. .
முஸ்லிம்களைப்பொறுத்தவரை எமது கட்சிக்குள் ஆறுமுனைப்போட்டி மாவட்டத்தில் 28முனைப்போட்டி.எனவே வாக்குகள் பிரியும். சிங்களஇனத்திலும் இதேபாணி. எனவே
எனது தமிழ்மக்கள் 1லட்சம்வாக்காளர்களில் 30வீதம் எனக்களித்தாலே எனது வெற்றி உறுதிப்படுத்தப்படும். எனக்கு எனது மக்களில் பூரணநம்பிக்கை உள்ளது.
வினா: தாங்கள் தெரிவானால் எவ்வகையான வேலைத்திட்டத்தை செய்வீர்கள்?
விடை: அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேசசெயலகப்பிரிவுகளில் தமிழ்மக்கள்
செறிந்துவாழ்கிறார்கள். அங்கு குடிநீர்ப்பிரச்சினை காலாகாலமாக
இருந்துவருகிறது.யாரும் தீர்ப்பாரில்லை.. இதுவரை வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இப்பிரச்சினையை தீர்க்கவில்லை.
குறிப்பாக குண்டுமடு செல்வபுரம் தாண்டியடி கண்ணகிகிராமம் மண்டானை காயத்திரிகிராமம் கோமாரி மல்லிகைத்தீவு மத்தியமுகாம் பெரியநீலாவணை போன்ற பிரதேச தமிழ்மக்கள் வரட்சிக்காலத்தில் குடிநீரின்றி சொல்லொணாக் கஸ்டத்தை
அனுபவித்துவருகிறார்கள்.மல்லிகைத்தீவுக்கிராமத்தில் நிலவிய
குடிதண்ணீர்பிரச்சினையால் சிறுநீரகநோய் ஏற்பட்டு சிலர் அநியாயமாக இறந்தனர். அத்தனை அனர்த்தம் நிகழ்ந்தும் இங்குள்ள தமிழ்எம்.பி. அங்கு செல்லவில்லையென அம்மக்கள் அழுதனர்.
திருக்கோவில் பிரதேசத்தில் தரிசுநிலமாகவுள்ள 25ஆயிரம் ஏக்கர் காணிக்கு சிறந்த நீர்ப்பாசனத்தை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளேன். அங்குள்ள இளைஞர்யுவதிகளு பாற்பண்ணை புடவைத்தொழிற்சாலை அமைத்துக்கொடுக்கவும்
திட்டமிட்டுள்ளேன். அதற்காக அமைச்சருடன் பேசிவிட்டேன்.

வினா: தேர்தல் நெருங்கிவிட்டது. இந்நிலையில் தலைவர் சஜித்பிரேமதாச ஆக தங்களின் அழைப்பை மட்டும் ஏற்று கடந்தவாரம் ஆலையடிவேம்பிற்கு பிரசாரக்கூட்டத்திற்கு மட்டும் வந்ததாக அறிகிறோம்? அப்படியென்ன விசேசம் உங்களில்?

விடை: இது ஒரு பாக்கியம். நான் அழைப்பு விடுத்தேன். உரியவேளைக்கு வந்தார். சிலர் தடுக்கநினைத்தனர். ஆனால் அவர் எனக்கதந்த முன்னுரிமை அது. அதனால்தான் அவரில் 100வீத நம்பி;க்கையுடன் செயற்படுகிறேன்.
வினா: அந்த வருகை பலனளித்ததா?

விடை: நிச்சயமாக. எமது தமிழ்மக்களின் கோரிக்கைகளை அழகாக சிங்களத்தில் எடுத்துரைத்தேன். அவரது பேச்சில் அனைத்திற்கும் சாதகமாக பதிலளித்து உறுதிமொழிவழங்கினார். அவரை நம்பலாம். தமிழ்மக்களும் 100வீதம் நம்புகிறார்கள். அதன்காரணத்தினால்தான் ஜனாதிபதிதேர்தலில் அவருக்கு தமிழ்மக்கள் 95வீத வாக்களித்தனர். இன்றும் அவரை பிரதமராக்க முனைந்துள்ளனர்.
வினா: தாங்கள் காரைதீவில் அகதிவாழ்க்கை வாழ்ந்ததாக குறிப்பிட்டீர்கள்? அந்த வாழ்க்கை எப்படி இருந்தது?
விடை: நல்ல கேள்வி. உண்மையில் வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்வுபூர்வமாக அறியமுடிந்தது காரைதீவில்தான். கல்வியின் மகத்துவத்தையும் அறிந்தது அங்கேதான்.அங்குள்ள மக்களின் வீரம் தீரம் கல்வி என்னை வெகுவாகக்கவர்ந்தது.

வினா: தமிழ்க்கட்சிகளில் போட்டியிடாமல் தேசிய சிங்களக்கட்சியில் போட்டியிடக்காரணம் என்ன?
விடை: தலையைச்சுற்றி மூக்கை தொடுவானேன்? தரகர் இல்லாமல் நேரடியாகச் சேவைசெய்யக்கூடிய கட்சியில் இணைந்துதான் மக்களுக்கு துரிதசேவையைய் செய்யமுடியும். சஜித் ஏழைகளின் தோழன் ஏளிமையின் மொத்தவடிவம். அவருடன் நேரடித்தொடர்பிலுள்ளவன் நான். நிலைமை அப்படியிருக்க தமிழ்க்கட்சிகளில் மக்கள் வெறுப்படைந்துள்ள நிலையில் நான அதில் கேட்டு பின்னர்பிரதமராகவிருக்கும் சஜித்திடம் கையேந்தவேண்டும்? அதற்காகவே நேரடியாகவே
அக்கட்சியில் கேட்கிறேன்.
வினா: தாங்கள் ஒரு சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்று அறியக்கூடியதாயுள்ளது. அது அரசியலுக்கு துணைபுரிகின்றதா?

விடை: அதுதான் எனது சிறப்பு. அரசியலில் நான் இன்று காலூன்றக்காரணமே அந்த மொழியறிவே. அதுதான் அமைச்சர்கள் அருகில் பயமில்லாமல் அருகில் செல்ல வாய்ப்பளித்தது. பலமேடைகளில் தலைவர் சஜித்தின் மொழிபெயர்ப்பாளராக
சேவையாற்றியிருக்கிறேன். ஏழைமக்களுக்கு ஜனசவிய வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய பெருந்தலைவர்
அமரர் பிரேமதாஸா. அவரொரு செயல்வீரன். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? எனவே அவருடைய மகன் சஜித் பிரேமதாசவும் அதேபாணியில் மக்களுக்கான வீட்டுத்திட்டங்களை முன்னெடு;த்துவருகிறார்.அவருக்கு எனது மொழி
உதவுகிறது.
வினா: சில வேட்பாளர்கள் மக்களுக்கு சோட்டி சாறன் அரிசிசீனி காசு எதையெல்லாமோ வழங்குகிறார்கள் என்று செய்திகள் அடிபடுகின்றன. தங்களின் நிலைப்பாடு என்ன?
விடை: வாக்கிற்காக பாய் கோழிக்குஞ்சி சாராயம் அரிசி பணம் போன்ற வடிவங்களில் லஞ்சம் பெற்றால் பின்பு சேவையை எதிர்பார்க்கமுடியாது. அவர்கள் அடுத்த ஜந்து வருடங்களின்பின்புதான் வருவார்கள். அவர்கள் லஞ்சம் கேட்பார்கள். அதனைத்தவிர்க்கமுடியாது. எனவே வாக்கிற்காக லஞ்சம் வழங்குவதை நிராகரிக்கிறேன்.

வினா: தமிழ்மக்கள் சார்பில் த.தே.கூட்டமைப்பு மற்றும் கருணா அணியினர் களத்திலிறங்கியுள்ள திகாமடுல்ல தேர்தல் களத்தில் உங்களால் தமிழ்வாக்குகளைப் பெறமுடியுமா?

விடை: கடந்தகால செயற்பாடுகளால் அவர்கள்மீது வெறுப்பலைகள் பெருமளிவல் உள்ளது. அவர்களோடு ஒப்பிட நான்விரும்பவில்லை. எனது களம் வேறு, எனக்கென்று சஜித் அலை வாக்குவங்கிஉள்ளது.நிச்சயம் நான் வெற்றிபெறுவேன்.
வினா: அரசின் பல அபிவிருத்தித்திட்டங்கள் தமிழ்மக்களுக்குக்
கிடைக்கவில்லையென குற்றம் சாட்டப்படுகிறதே? அதுபற்றிக்கூற முடியுமா?
விடை: உண்மை. கடந்தகாலங்களில் பலஇனவாதிகளால் முன்னெடுக்கப்பட்டுவந்த இனத்துவேச அரசியலின் வெளிப்பாடுகளே அவைக்குக்காரணம். அதற்கு தமிழ்
அரசியல் போக்கும் மறு காரணமெனலாம். எனவேதான் அளக்கிறவன் இருக்கும் ஆளுங்கட்சியில் இணைந்தால் அனைத்தும் சுலபமாகும்.
வினா: அம்பாறை மாவட்டத்தில் நீங்கள் எம்.பியானால் உங்கள் கட்சிசார்ந்த மாவட்ட அணுகுமுறைகள் எவ்வாறமையும் எனக்கருதுகிறீர்கள்?

விடை: வெல்வது உறுதியாகிவிட்டது. திருக்கோவில் ஆலையடிவேம்பு பகுதியில் எனது அலுவலகத்தை அமைத்து 24மணிநேரமும் மக்கள்சேவை செய்ய திட்டமிட்டுள்ளேன். மேலும் மக்கள் என்னைத்தேடி வரவேண்டிய அவசியமில்லை. நான் மக்களைத்தேடி ஊர்ஊராகச்செல்வேன்.

வினா: இறுதியாக மக்களுக்காக என்ன சொல்லவிரும்புகிறீர்கள்?

விடை: நான் மக்களுடன் இணைந்து பயணித்துவந்திருக்கிறேன். என்றும் பயணிப்பேன். தேர்தலுக்கு மட்டும் வந்துவிட்டு பின்னர் காணாமல்போகும் பிறப்பு இது இல்லை. வெறும் நிறைவேற்றமுடியாத வாக்குறுதிகளை தந்து ஏமாற்றுபவன் நானல்ல. செய்வதையே சொல்வேன். சொல்வதைச் செய்வேன். அது எனது
கொள்கை. எனவே இன்றும் என்றும் நாம் அனைவரும் மனதார விரும்பும் தொலைபேசிச்;சின்னத்திற்கு முதலில் வாக்களித்து பின்னர் எனது 08ஆம் இலக்கத்திற்கு வாக்களித்தால் நம்மனைவரது வாழ்வும் வளம்பெறும்.

வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு குறூப் நிருபர்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :