அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
இதற்கு அமைவாக மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200 இற்கு மேற்பட்டதாக இருந்த போதிலும் சுகாதார அமைச்சின் மூலம் வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடித்து மாணவர் எண்ணிக்கை வேறுபாடு மற்றும் தனிநபர் சமூக இடைவெளியை பின்பற்றி பாடசாலைகளை நடத்தமுடியுமாயின் மட்டும் போதுமான வகுப்பறை வசதி மற்றும் ஆசிரியர்கள் இருப்பார்களாயின் மாணவர்களுக்கு கல்வியை வழங்கும் நோக்குடன் இவ்வாறான பாடசாலைகளில் அனைத்து தரங்களுக்கான பாடசாலைகளை மீள ஆரம்பிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக மாகாண செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், அதிபர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment