பாராளுமன்ற கன்னியமர்வுக்குச் செல்ல பிள்ளையானுக்கு அனுமதி..!

வி
ரைவில் விலங்கை உடைத்து வெளியே வருவேன் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விரும்பு வாக்குகளினால் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் 2015 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுவரும் நிலையில் கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் அதில் கலந்துகொள்ளுவதற்காக மட்டக்களப்பு மேல்நீதிமன்றில் நகர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதனை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.எம்.சூசைதாசன், பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதற்கும் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொள்வதற்குமான அனுமதியை வழங்கியுள்ளார்.

நீதிமன்றில் இருந்து சிறைச்சாலைக்கு சந்திரகாந்தனை கொண்டு செல்லும்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த சந்திரகாந்தன் விரைவில் விலங்கினை உடைத்துவெளியில் வந்து அனைவருடனும் பேசுவதாக தெரிவித்தார்.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் எதிர்வரும் 20 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வில் சந்திரகாந்தன் கலந்துகொள்வார் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :