
எம்.பஹ்த் ஜுனைட்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஹாபீஸ் நசீர் அஹமட் இன்று(08) மாலை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வாயலுக்கு உரை நிகழ்த்த வந்த போது சிலர் அவரை வரவேண்டாம் என தடுத்ததையடுத்து பள்ளி வாயலுக்குள் அமளி துமளி ஏற்பட்டது .
இதன்போது அங்கு சென்ற இளம் ஊடகவியலாளரும் காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினருமான முகம்மட் ஆதிப் அங்கு நின்ற மாற்றுக்கட்சி ஆதரவாளர்கள் இருவரினால் தாக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் இவரது கையடக்க தொலைபேசி உட்பட சில உபகரணங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது..
தாக்க வந்தவர்களிடம் ஊடகவியலாளர் அடையாள அட்டையைக் காட்டியும் அவர்கள் தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாகவும் தாக்கியவர்களுக்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஊடகவியலாளர் ஆதிப் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment