மட்டக்களப்பு மாவட்ட முஸ்லீம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்..!?



அபு மபாஸ்-

டந்த ஆட்சியில் மட்டு மாவட்டத்தில் பதவிகளை அலங்கரித்தவர்கள் ஆட்சி அதிகாரங்களை கொண்டிருந்தவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டே இருந்தனர்.
அதுமாத்திரமல்லாமல் அதிகாரத்தில் இருந்த சிலர் தன் ஊரை மாத்திரம் அதிலும் தனக்கு தேவையானதை மாத்திரம் செய்து கொண்டிருந்தனர்.

மக்களின் தேவைகள் தூக்கி வீசப்பட்டன. சந்திக்கச் சென்றால் இன்று முடியாது பிறகு வா..
அல்லது இன்று சந்திக்க முடியாது கொழும்பில் இருக்கின்றார் எப்போது வருவார் என்று கூற முடியாது என்று சொல்வதுடன் கண்டு கொள்ளாதவர்களாக இருந்தவர்கள்தான் இன்று பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்று வாக்கு கேட்டு வீரவசனம் பேசுகிறார்கள்.

ஊர் வாதம் பார்க்காது சொந்தங்கள் பார்க்காது தரகர்களை நியமிக்காது நேரடி அரசியல் செய்யும் திறன் யாரிடம் இருக்கிறது என்பதனை மக்கள் நன்கு உணர வேண்டும்.
இருப்பது ஓரிரு நாட்கள் மட்டுமே!

மட்டு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர், முன்னாள் அமைச்சராகவும் ஆளுநராகவும் இருந்த ஒருவர், இராஜாங்க அமைச்சர்கள் இருவர், முன்னாள் முதலமைச்சர் ஒருவர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் புதியவர்கள் பலரும் முஸ்லீம்கள் சார்பாக களத்தில் இறங்கியுள்ளனர்.

இவர்களில் யார் சரியாக நடந்து கொண்டவர் யார் மக்களை சரியாக வழிநடாத்தியவர் என்பதனை மக்கள் அறிந்து வாக்களிக்க வேண்டும்.

இளைஞர்களை வழிகெடுப்போரும், யுவதிகளை ஏமாற்றி தன் வசப்படுத்தியோரும், பட்டதாரிகளை வீதிகளுக்கு இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யவைத்தோரும், சுகபோகம் மாத்திரம் அனுபவிக்க அரசியலை பயன்படுத்தியோரும், மக்களைக் காட்டி சொத்துக்களை குவிப்போரும், தன் ஊரைத் தவிர வேறு எங்கும் அபிவிருத்திகள் இதர தொழில் பேட்டைகளை அமைக்காதோரும் மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்.

மக்களுக்காக அதிகாரம் இல்லாத போதும் களத்தில் நின்றவர் யார்?
மக்களின் குறைகளை கேட்டறிய மக்களின் இடங்களுக்கு வீதி வீதியாக திரிந்து உதவிகள் செய்தவர் யார் என்று தேடிப்பாருங்கள் அவர்களுக்கே உங்கள் வாக்கினை வழங்குங்கள்.

குறிப்பாக காத்தான்குடி மக்கள் உங்கள் வாக்கினை மிக கவனமாக வழங்க வேண்டிய நிலை இருக்கிறது.

கடந்த கசப்பான வெறுக்கத்தக்க விடயங்களால் நொந்து போய் இருக்கும் காத்த நகர் மக்களே உங்கள் வாக்கினை வீணாக்கி விடாதீர்கள் உங்கள் வாக்கின் மூலம் உங்களுக்காக குரல் கொடுக்க ஒருவரை கட்டாயம் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
இது காலத்தினதும் சமூகத்தினதும் கட்டாய தேவையாகும்.

வாக்கினை விக்கும் தரகர்களின் வலையில் வீழ்ந்து விடாதீர்கள் மட்டு மாவட்ட முஸ்லீம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது இத்தேர்தலின் கட்டாயப் பங்கினை வகிப்பது உலகறிந்த விடயம் ஆகவே மட்டகளப்பு மாவட்ட மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவு அடுத்த தொடரில் வரும்..

தொடரும்...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :