நாடாளாவிய ரீதியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மின்சார துண்டிப்பினால் சுமார் 230 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெரவலப்பிட்டிய மற்றும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நேற்று முன்தினம் சுமார் எட்டு மணித்தியாலத்திற்கும் மேலாக நாடாளவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதற்கமைய, சுமார் ஆயிரத்து 200 மெகாவோட்ஸ் மின்சாரம் தடைப்பப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது
இதேவேளை, பழுதடைந்துள்ள இயந்திரங்களை சீர் செய்வதற்கு சுமார் தொள்ளாயிரம் மில்லின் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக மின்சார சபையின் ஊடகப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment