ஜனாதிபதி மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை நியமித்துள்ளாா்.


அஸ்ரப் ஏ சமத்-
ஸ்ரீலஙகா பொதுசன பெரமுனைக்கு முஸ்லிம்கள் கனிசமான வாக்குகள் அளிக்காவிட்டாலும், இன மத கட்சி நிற பேதமின்றி ஜனாதிபதியவாகள் தேசிய பட்டியலில் மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை நியமித்துள்ளாா். இதில் இருந்து நீங்கள் அவரை புரிந்து கொள்ளமுடியும் அவரது சீரான அரசியல் நிர்வாகம் ஜாதி மத இன பேதமற்ற ஒரு தலைவா். இனி நாம் உணா்ச்சிபூர்வமான இன ரீதியான அரசியலை விட்டு விட்டு தேசிய ரீதியிலான அறிவு பூர்வமான அரசியலை நாம் செயல்படல் வேண்டும். என அலி சப்றி உரையாற்றினாா்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பிணராக தெரிபு செய்யப்பட்டதனை அடுத்து சனிக்கிழமை 08 ஆம் திகதி கொழும்பு வாழைத்தோட்டத்தில் உள்ள் நியாஸ் மௌலவியின் அரபிப் பாடசாலையில் துஆப் பிராத்தனை இடம் பெற்றது. அத்துடன் கொழும்பு புதுக்கடை சந்தியில் உள்ள ஸ்ரீலங்கா பொதுசன பெரமுனையின் முஸ்லிம் இளைஞா் அமைப்பினால் வரவேற்பு வைபவம் பாற்சோறு பரிமாறல் நிகழ்வுகளும் நடைபெற்றன. இவ் வைபவங்களில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அலி சப்றி மேற்கண்டவாறு தெரிவித்தாா்.

தொடா்ந்து உரையா்ற்றிய அலி சப்ரி தெரிவிததாவது

வட கிழக்கு தவிா்ந்த ஏனைய பிரதேசங்களான கம்பாந்தோட்டை தொட்டு குருநாகல் வரையிலான பல சிங்களப் பிரதேசங்களோடு பின்னிப் பினைந்து வாழும் முஸ்லிம் குக் கிராமங்கள் பல உள்ளன.. அவா்களது கல்வி, வாழ்வதாரம், வாழ்க்கைத்தரம் முன்னேற்றம் அடைவதற்கு நாம் தேசிய ரீதியிலான அரசியலே நமக்கு தேவையாக உள்ளது.
இம்முறை மட்டக்களப்பு, வன்னியில் காதா் மஸ்தான், மாவனல்லை வெலிகம, குருநாகல் வேருவளை நுவரேலியா, பதுளை , வாழ் முஸ்லிம், தமிழ் மக்கள் எமது கட்சிக்கு இம்முறை வாக்கிளத்துள்ளாா்கள். அத்துடன் எமது கட்சியின் முன்னனியில் அங்கம் வகிக்கின்றன கட்சிகளான ஸ்ரீ.ல.சு.கட்சி, அங்கஜன், யாழ்ப்பாணத்தில் டக்லஸ் தேவனாந்தா , அம்பாறையில் தேசிய காங்கிரஸ், அதாவுல்லா மட்டக்களப்பில் பிள்ளையான் போன்ற கட்சிகளில் இருந்தும் எமக்கு ஆதரவு இம்முறை கிடைத்துள்ளது. எனவே அரசாங்கம் எதிா்பாா்த்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. அத்துடன் கல்விமான்கள், சட்டத்தரணிகள் வங்கியாளா்கள் வா்த்தகா்கள் என தேசியபட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்கின்றனா் அவா்கள் ஒன்று சோ்ந்து இந்த நாட்டினை சிறந்த ஒரு நாடாக கட்டியெழுப்புவதற்கு பிரதமா் ஜனாதிபதியுடன் சேவையாற்றுவாா்கள். இந்த நாட்டில் போதைவஸ்த்து, பாதாளக் கோஸ்டி என்பன ஒழக்கப்படும்.இதனால் இந்த நாட்டில் வாழும் சகல சமூகங்களும் நன்மை பெறும். என அலி சப்றி அங்கு உரையாற்றினாா்.
இவ் வைபவத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையில் முஸ்லிம் அமைப்பின் தேசிய அமைப்பாளா் உவைஸ் காஜியும், மௌலவி தாஸீம், நியாஸ் மௌலவியின் புதல்வர் குமைர் மௌலவி ஆகியோா்களும் கலந்து கொண்டு துஆப் பிராத்தனையிலும் ஈடுப்ட்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :