ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தனக்குமுள்ள நெருக்கத்தில் காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் அதிலிருந்து அப்புறப்படுத்த பல்வேறு பிராயத்தனங்களை எடுத்து வருவதாகவும் அதன் ஒரு அங்கமாக நான் சுசந்த புஞ்சி நிலமேயின் அழைப்பின்பேரில் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி பொதுஜன பெரமுனையில் இணைந்து, சுசிலின் இணைப்பாளராக பதவியேற்றுள்ளதாக போலி முகநூலில் பதிவிட்டுள்ளதாகவும் குறித்த தகவலுக்கும் தனக்கும் எவ்வித தொடர்புமில்லையென்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொருளாளருமான அல் ஹாஜ் ஏ.சி.யஹ்யாகான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தான் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் களமிறங்க தயாறாகிவரும் இந்த சூழலில், கட்சிக்குள் இணைந்து புதிதாக பதவிகளை பெற எத்தனிக்கும் சிலரின் கூலிஆட்களின் முயச்சியாகவே தான் குறித்த செயற்பாடுகளைக் கருத்துவதாகவும் இவ்வாறனவர்களின் கீழ்த்தரமான செயற்பாடுகள் தன்னை எதுவும் செய்யப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களுக்கு தன்னைப்பற்றிய நல்ல அபிப்பிராயம் உள்ளதென்றும் அதனை யாராலும் சிதைக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளார். சாய்ந்தமருதில் கட்சிக்கு ஏற்பட்ட பாரிய அழுத்தங்களை நெஞ்சிநிமிர்த்தி முகங்கொண்டவர்கள் தாங்கள்தான் என தெரிவித்துள்ள அவர், மாகாணசபைத் தேர்தலில் களமிறங்குவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment