எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் மாணவத் தலைவிகளை தெரிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு (26) புதன்கிழமை நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் வழிகாட்டலில் பிரதி அதிபர் எஸ்.பாறூக் கான் தலைமையில் நடைபெற்ற இத் தேர்வில் க.பொ.த.உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
தரம் ஒன்று தொடக்கம் உயர் தரம் வரை சுமார் 750 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி கற்கும் குறித்த பாடசாலையில் மாணவிகளின் செயற்பாடுகள் தொடர்பாக அதிபர், ஆசிரியர்களுடன் இணைந்து வழி நடாத்த மாணவத் தலைவிகள் இணைத்துக் கொள்ளப்பட்டனர் என்று பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment