
நடந்து முடிந்த 2020ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத்தேர்தலில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மரச்சின்னத்தில் இலக்கம்
இரண்டில் போட்டியிட்ட என்னை பெருமளவிலான விருப்பு வாக்குகளைத்
தந்து அமோக வெற்றியீட்டச் செய்தமைக்காக இதயபூர்வமான
நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏறாவூர், கல்குடா, காத்தான்குடி பிரதேசங்களிலிருந்து பெருமளவிலான
முஸ்லிம் சகோதரர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப்
பிரதேசங்களிலும் பரவலாக வாழுகின்ற கிறிஸ்தவ, தமிழ்
சகோதரர்களும் தங்கள் அன்பின் அடையாளமாக விருப்பு வாக்கினைத்
தந்த எனது பெருவெற்றிக்குப் பங்களிப்பு செய்தமையானது நெஞ்சத்தில்
நீங்கா இடத்ததைப் பெற்றுள்ளது.
இவ்வெற்றியை உங்களதுவெற்றியாகவே கருதுகின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்றப் பிரதிநிதி என்ற வகையில்
அனைத்துப் பிரதேசங்களுக்கும் என்னாலான சேவைகள் தொடரும்
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து மக்களும் அபிவிருத்திப்
பயணத்தில் ஒன்றாகக் கைகோர்ப்போம்.
0 comments :
Post a Comment