தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு இதற்கான அழைப்பினை இவர்களுக்கு விடுத்திருக்கின்றது.
இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் இராணுவத் தளபதியான பீட்ல் மார்சல் சரத் பொன்சேகா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்களை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி ஆஜராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
0 comments :
Post a Comment