முறையான பயிற்சிகள் மூலம் நிபுணத்துவம் உடைய தொழிற்படையை உருவாக்க முடியும்-திருமலை அரசாங்க அதிபர்

எப்.முபாரக்-


திமேதகு ஜனாதிபதியின் நோக்கங்களுள் ஒன்றான பயிற்சிகள் மூலம் நிபுணத்துவம் உடையவர்களை உருவாக்கி அவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ளல் வேலைத்திட்டத்தின் திருகோணமலை மாவட்ட கலந்துரையாடல் இன்று (11) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தலைமையில் நடைபெற்றது.

தகுதியுடையவர்கள் ஏதோ ஓர் அடிப்படையில் வேலைகளை பெற்றுக்கொள்கின்றார்கள்.இருப்பினும் க.பொ.சாதாரன தரம் சித்தியடையாதவர்கள் மற்றும் இடைநடுவே கல்வியை கைவிட்டவர்கள் ஏதோ சில துறைசார் திறன்களை கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.அவ்வாறானவர்களை இனங்கண்டு முதல் கட்டமாக ஒரு இலட்சம் பேருக்கு பயிற்சிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு அரச வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும். வேலைவாய்ப்பின்மை குறைவடையும்.இது நாட்டுக்கு சாதகமான அம்சமாகும்.

திருகோணமலை மாவட்டத்தில் 7400 பேர் சிபாரிசு செய்து பல்நோக்கு அபிவிருத்தி செயலணிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தெரிவுசெய்யப்பட்டவர்களின் இறுதி பெயர்ப்பட்டியல் கிடைக்கப்பெற்றதும் பயிற்சிகள் அந்தந்த பிரதேச செயலகப்பிரிவிலே உள்ள நிலையங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.பயிற்சிகளை வழங்கும் பொறுப்பு நைட்டா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

பயிற்சியின் போது ஒருவருக்கு மாதத்திற்கு 22500 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம்.ஏ.அனஸ்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன் ,உட்பட
அதிகாரிகள்ப லரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :