தலவாக்கலை பி.கேதீஸ்-
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் 107 வது ஜனன தினத்தையொட்டி 30.8.2020 ஞாயிற்றுக்கிழமை பழைய பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், இ.தொ.காவின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன், முன்னாள் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் மலர் மாலை அணிவித்தனர்.
அதனை தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை காரியாலயமான சௌமிய பவனில் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் ஞாபகர்த்த ஆவண கண்காட்சி ஒன்றும் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment