டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி இன்னும் 4 வருடங்களுக்கு தேவை: துனை ஜனாதிபதி வேட்பாளர் மைக் பென்ஸ்!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

மெரிக்கா தற்போது எதிர் கொண்டிருக்கும் இக்கட்டான காலக்கட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சி இன்னும் 4 வருடங்களுக்கு தேவை என்று மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியாக குடியரசுக் கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் தீவிரவாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார். இந் நிலையில் மைக் பென்ஸ் கூறியதாவது:-

“அமெரிக்கா தற்போது எதிர் கொண்டிருக்கும் இந்தக் இக்கட்டான காலக்கட்டத்தில் அடுத்த 4 வருடங்களுக்கு டொனால்ட் ட்ரம்பின் ஆட்சி தேவை. உண்மை என்னவென்றால் ஜோ பிடன் கையில் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது. 4 வருடங்களுக்கு முன்னர், ட்ரம்புக்கு ஆதரவாக பேசினேன். ஏனென்றால் அமெரிக்கா சிறந்த நாடாக மாற டொனால்ட் ட்ரம்ப் சிறந்த நோக்கங்களை கொண்டிருந்தார் என்பது எனக்குத் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோ பிடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்கா சீனாவுக்கு சொந்தமாகிவிடும், அமெரிக்காவின் வேலைவாய்ப்புக்கள் சீனாவுக்கு அளிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்.
அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தல் இவ்வருட இறுதியில் November மாதம் நடைபெறவுள்ளது.

இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் ஜனாதிபதி வேட்பாளராகவும், கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :