மேலும் 447 இலங்கையர் நாடு திரும்பினர்..

ஜே.எப்.காலா பேகம்-

கொரோனா தொற்று காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 447 இலங்கையர்கள், இரண்டு விமானங்கள் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதற்கமைய, 420 இலங்கையர்கள் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான E.K – 648 எனும் விமானம் ஊடாக, இன்று அதிகாலை 1.15 இற்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகைத்தந்தவர்களின் இரு குழந்தைகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து டோஹாவில் இருந்து கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான Q.R – 668 எனும் விமானம் ஊடாக 43 பேர் இன்று அதிகாலை 1.45 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதில், 27 இலங்கை பயணிகள் எனவும் ஏனைய 16 பேர் இலங்கைக்கு வருகைத்தந்த தூதுவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு, இவ்வாறு வருகைத்தந்தவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப் பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :