காரைதீவு சகா-
அம்பாறை மாவட்டத்தில் 26வருடங்களின் பின்பு மீண்டும் பாராளுமன்றப்பிரதிநிதித்துவமின்றி அம்பாறைமாவட்ட தமிழ்மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்ட்டுள்ளனர்.
இதற்கு முன்பு 1994இலும் இப்படியானதொரு சம்பவம் நிகழ்ந்த வரலாறுள்ளது.
1994.08.16ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழர் சார்பில் தமிழர்விடுதலைக்கூட்டணி ரெலோ சுயேச்சைஅணி என்பன போட்டியிட்டன. அவை முறையே 24526 வாக்குகளையும் 4192வாக்குகளையும் 3366வாக்குகளையும் பெற்றுத் தோல்வியைச் சந்தித்தன. மாவை சேனாதிராஜா த.கோபாலகிருஸண்ணன் உள்ளிட்ட பிரபலங்கள் அத்தேர்தலில் போட்டியிட்டு மண்கவ்வினர்.
தாமே தம் தலைமீது மண் அள்ளிப்போட்டுக்கொண்ட சம்பவமாக அதனைப்பார்க்கலாம்.
அத்தேர்தலில் பி.தயாரத்ன 45411வாக்குகளையும் சந்திரதாச கலப்பதி 40675வாக்குகளையும் எச்எம்.வீரசிங்க 36276வாக்குகளையும் எம்.எச்.எம்.அஷ்ரப் 69076 வாக்குகளையும் யு.எல்எம்.முகைதீன் 26194வாக்குகளையும் பெற்று தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதாவது அத்தேர்தலில் தமிழர் யாரும் தெரிவாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
26வருடங்களின் பின்பு..
26வருடங்களின் பின்பு 2020இல் தற்போது மீண்டும் அதேநிலைமை அம்பாறை தமிழர்களுக்கு நேர்ந்துள்ளது.
இம்முறை தமிழர்சார்பில் பிரதானமாகப் போட்டியிட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு 25255 வாக்குகளையும் அகிலஇலங்கை தமிழர்மகாசபை 29379வாக்குகளையும் பெற்று தோல்வியைச்சந்தித்தன.
இங்கு 4124வாக்குகள் வித்தியாசத்தால் த.தே.கூட்டமைப்பை அ.இ.த.மகாசபை சார்பிலான கருணா அம்மான் அணி தோற்கடித்திருப்பது ஒருபுறம். மறுபுறம் த.தே.கூட்டமைப்பு தொடர்ச்சியாக பெற்றுவந்த ஒரு ஆசனம் இழக்கப்பட்டிருப்பதும் இவ்வண் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 126இ012 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும்இ ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 102இ274 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும்இ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 43இ319 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும்இ தேசிய காங்கிரஸ் 38இ911 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும்இ கைப்பற்றியுள்ளது.
அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுரன சார்பில் விமலவீர திசாநாயக்க 63594 வாக்குகளையும் வீரசிங்க 56006 வாக்குகளையும் திலக் ராஜபக்ஷ 54203 வாக்குகளையும் ஜக்கிய மக்கள் சக்தியின் சார்பில் எச்.எம்.எம்.ஹரிஸ் 36850 வாக்குகளையும் பைசால் காசிம் 29423 வாக்குகளையும் தேசிய காங்கிரஸ் சார்பில் ஏ.எல்.எம். அதாஉல்லா 35697 வாக்குகளையும் அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் முஷர்ரப் 18389வாக்குகளையும் பெற்று உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
த.தே.கூட்டமைப்பு 2010 பொதுத்தேர்தலில் 26895 வாக்குகளைப்பெற்று பொடியப்பு பியசேனவையும் 2015 பொதுத்தேர்தலில் 45421 வாக்குகளைப்பெற்று க.கோடீஸ்வரனையும் பாராளுமன்ற உறுப்பினர்களாகப் பெற்றிருந்தது.ஆனால் இம்முறை அக்கட்சி ஆக 25255 வாக்குகளை மாத்திரமே பெறமுடிந்தது.
ஆக அம்பாறை மாவட்ட வரலாற்றில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரொருவர் ஒருதடவை மாத்திரமே சேவையாற்றக்கூடிய வாய்ப்பு இருந்துவருகிறது. முதன்முதலில் 1977இல் பொத்துவில் தொகுதியில் எம்.சி.கனகரெட்ணம் தொடக்கம் 2015இல் க.கோடீஸ்வரன் வரை அனைவரும் ஒரு தடவை மாத்திரமே பாராளுமன் உறுப்பிராக வந்துள்ளனர். இதுவரை யாரும் இந்த சரித்திரத்தைமுறியடிக்கவில்லை.

0 comments :
Post a Comment