இலங்கையில் 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஹம்பாந்தோட்டை – பெலிஅத்த தொகுதியில் களமிறங்கி வெற்றிவாகைசூடி பாராளுமன்றம் தெரிவான மஹிந்த ராஜபக்ச இற்றைவரை 50 ஆண்டுகளாக பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்டுவருகிறார். (1977 இல் மட்டுமே அவருக்கு தோல்வி ஏற்பட்டிருந்தது. ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் தேர்தலில் போட்டியிடவில்லை.)
அத்துடன் வாசுதேவ நாணயக்கார (1970), இரா. சம்பந்தன் ஆகியோர் 1977 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற அரசியலில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்களில் பட்டியலில் ரணில் விக்கிரமசிங்க இணைந்திருந்தாலும் இம்முறை அவர் வெற்றிபெறவில்லை.எனினும், தொடர்ச்சியாக 42 வருடங்கள் எம்.பியாக செயற்பட்ட பெருமை அவரையே சாரும்.
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களுள் 70 வயதைக்கடந்துள்ள அரசியல்வாதிகள் விபரம் வருமாறு,
1.இரா. சம்பந்தன் – வயது 89
இலங்கை தமிழரசுக்கட்சி – திருகோணமலை மாவட்டம்.
2.திஸ்ஸ வித்தாரன – வயது 85
லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர்
(ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நியமனம்)
3.வாசுதேவ நாணயக்கார – வயது 81
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – இரத்தினபுரி மாவட்டம்.
4.சி.வி. விக்னேஸ்வரன் – வயது 80
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – யாழ். மாவட்டம்.
5.சமல் ராஜபக்ச – வயது 77
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – அம்பாந்தோட்டை மாவட்டம்.
6.காமினி லொக்குகே – வயது 77
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – கொழும்பு மாவட்டம்.
7.மஹிந்த ராஜபக்ச – வயது 74
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – குருணாகலை மாவட்டம்.
8.ஜீ.எஸ். பீரிஸ் – வயத 74
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – தேசியப்பட்டியல்
9.மஹிந்த யாப்பா அபேவர்தன – வயது 74
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – மாத்தறை மாவட்டம்.
10. லக்ஷ்மன் கிரியல்ல – வயது 72
ஐக்கிய மக்கள் சக்தி – கண்டி மாவட்டம்.
அதேவேளை, 70 வயதடைக்கடந்துள்ள சமல் ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச, வாசுதேவ நாணயக்கார, காமினி லொக்குகே ஆகியோர் அமைச்சரவை அமைச்சு பதவியையும் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment