வடகிழக்கு மாகணம் இணைக்கப்பட வேண்டும் என்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபன நிலைப்பாட்டடினை முஸ்லிம் காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கின்றது.என அக்கட்சியின் பிரதி தலைவரும்,முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,திகாமடுல்ல மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸ் இன்று(19)கல்முனையில் தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்து இருந்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் அம்பாறை மாவட்டத்தில் பெரும்பானை இன குடியேற்றங்கள் நடைபெறலாம் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் ஆக்கப்படலாம் இதனால் எங்களுடைய அரசியல் பலம் இல்லாமல் போகலாம் என்ற ஒரு ஆபத்து உள்ளது
இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றினை வெளியிட்டுள்ளது அந்த விஞ்ஞாபனத்தில் வட-கிழக்கு தனி மாநிலமாக மாற்றப்பட்டு சமஸ்டி தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்தாலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தை பற்றி எந்தவிதமான அக்கறையும் இன்றி அவர்களே பலவந்தமாக 1987ம் ஆண்டு வட-கிழக்கு இணைத்தது போன்று மீண்டும் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களை வடக்குடன் இணைத்து அவர்களின் உரிமைகளை இல்லாமல் ஆக்குகின்ற சதியினை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யப்போகின்றது என்கின்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுசம்மந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவர் என்ற ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட-கிழக்கு மாகாணம் இணைக்கப்பட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எங்களுடைய நிலைப்பாடு கிழக்கு மாகாணம் தனித்து இருக்க வேண்டும் இந்த மாகாணத்தில் மூன்றின மக்கள் வாழ்கின்றார்கள். ஒரு மாகாண சபை தேர்தல் ஊடாக தங்களுடைய பிரதிநிதிகளை உறுதிப்படுத்துகின்ற நிலைமை இந்த மக்களுக்கு இருக்க வேண்டும். இதனை இணைத்து முஸ்லிம் மக்களை அநாதையாகின்ற விடயத்தினை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதேநேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் புறக்கணித்து செய்து இருக்கின்ற இந்த விடயமானது மறைந்த தந்தை செல்வநாயகம் உயிருடன் இருந்து இருந்தால் இந்த விடயத்தினை நிச்சயமாக அனுமதித்து இருக்கமாட்டார்.
அவர் 1956ம் ஆண்டு திருமலை மாநாட்டில் கிழக்கில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பிராந்திய சபைகள் உருவாக்கப்பட்ட வேண்டும் அதில் முஸ்லிம் மக்களும் தேவையேற்படின் சிங்கள மக்களும் சபைகளை உருவாக்கலாம் என்று மிக தாராள மனப்பான்மையுடன் செயற்பட்ட தலைமைகள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்தன.
ஆனால் இன்று ஒரு பெரும் சமூகமான முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை புறந்தள்ளிவிட்டு முடிவெடுத்து இருப்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதே நேரம் கல்முனை விவகாரத்தில் சில சக்திகள் வன்முறையை துண்டுகின்ற வகையில் ஏன் செயற்பட வேண்டும் என்கின்ற கேள்வி எம்மிடத்தில் உள்ளது.இந்த நாட்டில் பல நகரங்கள் உள்ளன அதில் எல்லா இன மக்களும் இணைந்து வாழ்கின்றார்கள். குறிப்பாக நாவிதன்வெளி,காரைதீவு போன்ற பிரதேச செயலக பிரிவுகளில் தமிழ் மக்கள் கூடுதலாக வாழ்ந்து வருகின்றனர் அதேநேரம் 35% ,36%ற்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் அந்த பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு முகவெற்றிலையாகவும், அடையாளமாகவும் இருக்கின்ற கல்முனை மாநகரத்தினை மட்டும் இலக்கு வைத்து இந்த ஞானசாரவும் கருணாவும் வந்து கலவரபூமியாக மாற்ற நினைப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கபோவதிலலை.
ஏனென்றால் கல்முனை என்பது முழு முஸ்லிம் சமூகத்திற்கும்,கிழக்கு மாகாணத்திற்கும், அம்பாறை மாவடத்திற்கும் ஒரு அடையாள சின்னம். எனவே அதனை ஒரு போதும் நாங்கள் விட்டுக்கொடுக்க போவதில்லை.கல்முனை பிரச்சினைக்குத் தீர்வாக அரசாங்கத்திடம் பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.1895ம் ஆண்டு இந்த பிராந்தியத்திலேயே நான்கு சபைகள் இருந்தது குறிப்பாக அது பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் ஒருவாக்கப்பட்டது.இது தமிழ் தலைமைகளினால் உருவாக்கப்பட்ட விடயம் அல்ல.ஒரு நடுநிலையாக இருந்த பிரிட்டிஷ் அரசினால் இந்த பிராந்தியம் நான்காக பிரிக்கப்பட்டு கல்முனை தெற்கில் சாய்ந்தமருது மக்களுக்கு என்று ஒரு கிராம சபையும், கல்முனை வடக்கில் மருதமுனை மக்களை மையப்படுத்தி ஒரு கிராம சபையும், கல்முனை மேற்கில் தமிழ் மக்களை மையப்படுத்தி ஒரு கிராம சபையும் கல்முனை மத்தியில் 75%மேற்பட்டு வாழ்கின்ற முஸ்லிம் மக்களை மையப்படுத்தி ஒரு பட்டின சபையும் உருவாக்கப்பட்டது.
எனவே இந்த தீர்வு சம்மந்தமாக நாங்கள் எல்லா தரப்பினருக்கும் எங்களின் நியாயங்களை எடுத்துகூறி இருக்கின்றோம். எனவே யாரும் கல்முனையின் வரலாறினை கொள்ளையடிப்பதற்கு நாங்கள் ஒரு போதும் இடமளிகமாட்டோம்
இந்த தேர்தல் கால கட்டத்தில் அரசியல் இலாபம் தேடுவதற்காகவும், தமிழ் மக்களின் வாக்கினை பெற்றுக் கொள்வதற்காகவும் கருணா அம்மான் போன்றவர்கள் அம்பாறை மாவட்டத்தில் பிட்டும் தேங்காய் பூவுமாக ஐக்கியமாக வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் வேறுப்பாட்டினையும், சந்தேகத்தையும் உருவாகின்ற, இனவாத்தினை தூண்டுகின்ற பேச்சினை கருணா அம்மான் நிறுத்த வேண்டும் என பகிரங்கமாக வேண்டிக்கொள்ளுகின்றேன்.என ஹரீஸ் குறிப்பிட்டார்
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் வேதாந்தி சேகு.இஸ்ஸத்தீன்
கல்முனை மாநகர சபை மேயர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.ரக்கீப்,பிரதி மேயர் ரகுமத் மன்சூர்,கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம்.றோஸன் அக்தார்,எம்,எஸ்.எம்.நிசார்(ஜேபி),ஏ.சி.ஏ.சத்தார்,எம், எஸ்.உமர் அலி,சட்டத்தரணி ஆரிகா காரியப்பர்,திருமதி முர்சீத் அமீன்,காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர் பஸ்மீர்,எம்.எச்.எம் இஸ்மாயில்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எம் முஸ்தபா,எம்,ஐ.எம் பிர்தெளஸ்,முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொருளாளர் ஏ,சி யஹியாக்கான்,முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தகர்களான சட்டத்தரணி சாரீக் காரியப்பர், எம்.எஸ்.எம் பழீல்,பி.டி.ஜமால்,எம்
எம் பாமி,எம்,எச்.நாசார், உட்பட ஊடகவியலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்..