கோழிகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தினால், எதிர்வரும் நாட்களில் முட்டைகளின் விலை அதிகரிக்கக் கூடும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோழி உணவுக்காக சோளம் தேவைப்படுகின்ற போதிலும், மாற்று உணவாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் மெட்ரிக் டொன் கோதுமையை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
எனினும், கோழிகளுக்கு வழங்குவதற்கு கோதுமை பொருத்தமில்லை என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் துமிஷ்க சுபசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தற்போது முட்டையொன்றின் சில்லறை விலை 23 ரூபாவாக காணப்படுகின்றது.
இந்த நிலையில், முட்டையின் விலை அதிகரிக்கக் கூடும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் துமிஷ்க சுபசிங்க குறிப்பிட்டுள்ளார்.