இம்முறையாவது முஸ்லிம் சமூகம் விழித்துக்கொள்ளா விட்டால் பாரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும் ; குதிரை வேட்பாளர் ஏ.எல்.எம். சலீம்.


நூருல் ஹுதா உமர்-
ங்களுக்கு இவ்வளவு காலமும் தலைமைத்துவம் வழங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர்கள் நல்ல தலைவர்களாக இருந்திருந்தால் இந்த நாட்டில் சுய கௌரவத்துடன் வாழ்ந்த முஸ்லிம் சமூகம் இன்று இவ்வளவு அவமானங்களை சந்தித்திருக்காது என தே.காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் முன்னாள் சட்டமொழுங்கு அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் தேசிய காங்கிரசின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் பேசிய அவர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர்களினது வார்த்தைகளில் உண்மை இல்லை, அவர்களின் இதயத்தில் இது நமது சமூகம் என்ற இரக்கம் கொஞ்சமும் இல்லை, அவர்களின் மனதில் எப்போதும் பணம், பட்டம், பதவிகள் என்ற ஆசைகளை மாத்திரமே இருந்துவந்துள்ளது. பேராசை கொண்ட கண்டி, வன்னி தலைமைகளிடம் நாம் இவ்வளவு காலமும் ஏமாந்தது போதும். இனியும் அவ்வாறான பசப்பு வார்த்தைகளுக்கு நாங்கள் சோரம்போக முடியாது.
இக்கட்டான சூழ்நிலைகளில் வாழும் நாம் இன்று விழித்துக்கொள்ளாவிட்டால் நமது சமூகம் என்றுமே இந்த நாட்டில் உயர்வினைப்பெற முடியாமல் போய்விடும் என்பது கசப்பான உண்மை. அந்த உண்மைகளை அறிந்து நாட்டின் எழுச்சிக்கும், முஸ்லிங்களின் சரியான போக்குகளுக்கும் நாம் ஒழுங்கான பாதையில் பயணிக்க வேண்டும். அதனாலயே தான் சாய்ந்தமருது மண் என்றும் உண்மையான எண்ணங்களுக்கு உரமூட்டும் மண்ணாக கடந்த காலங்களில் இருந்து வந்துள்ளது.
அந்த வரலாற்றுக்கு இப்பெரும்திரலான மக்கள் அலை சாட்சியாக இருக்கிறது. இந்த கூட்டத்தின் திரளை சாய்ந்தமருது மக்கள் தேசிய காகிரஸின் வெற்றிக்கு சமர்ப்பணம் செய்கின்றோம்.நாங்கள் எம் சமூகத்திடம் மன்றாட்டமாக கேட்பது என்னவென்றால் இம்முறை தேசிய காங்கிரசுக்கும் அதன் சின்னம் குதிரைக்கும் வாக்களியுங்கள் என்பதுடன் உண்மையின் பக்கம் அணிதிரளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். இக்கூட்டத்தில் தேசிய காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அடங்கலாக தேசிய காங்கிரசின் வேட்பாளர்கள், தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்கள் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -