முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ வேண்டுமாக இருந்தால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்


எஸ்.எம்.எம்.முர்ஷித்-
முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ வேண்டுமாக இருந்தால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படக் கூடிய கட்;சிகளுடன் நாங்கள் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படுவதன் மூலம் எங்களது பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும் என ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி எம்.பி.முஸம்மில் தெரித்தார்.
வாழைச்சேனை பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வியாழக்கிழமை இரவு கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் -

கடந்த காலங்களை போன்று நாம் மக்களை ஏமாற்ற முடியாது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு முஸ்லிம் மக்கள் மற்றும் தமிழ் மக்கள் மீது எந்த கோபமும், சந்தேகமும் கிடையாது. முஸ்லிம் தலைவர்களிடத்தில் மாத்திரம் வெறுப்பாக உள்ளனர்.
முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ வேண்டுமாக இருந்தால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படக் கூடிய கட்;சிகளுடன் நாங்கள் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படுவதன் மூலம் எங்களது பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளை பெற்றுக் கொள்ள முடியும்.
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. கோறளைப்பற்று மத்தி பிரதேச சபையை பெற்றுக் கொள்வது, வேலைவாய்ப்பில்லாத பிரச்சனை மற்றும் அபிவிருத்திகள் போன்ற பல வழிகளில் நாங்கள் எமது பிரதேசங்களில் அபிவிருத்திகளை செய்யப் போகின்றோம்.
நீங்கள் எங்களுக்கு வாக்களிக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் கல்குடாத் தொகுதியிலுள்ள பிரச்சனை மாத்திரமல்ல மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரச்சனைகளையும் எமது ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக நிறைவேற்றி தருவோம் என்றார்.

ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளரும், வேட்பாளருமான பசீர் சேதாவூத், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப், கட்சி பிரமுகர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரச்சாரச் செயலாளர் ஐ.எம்.ஹாரிப் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் வேட்பாளர்களான கூட்டமைப்பின் தவிசாளரும், வேட்பாளருமான பசீர் சேதாவூத் எஸ்.ஜவாஹிர் சாலி; கட்சி பிரமுகர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -