எட்டியாந்தோட்டை, பஹல கராகொடை, அல்ஹிக்மா ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் கடந்த ரமழான் மாதம் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு 10,000/-, 7,500/-, 5,000/- பணப்பரிசில்களுடன் ஸஹீஹுல் புஹாரி, ரஹீகுல் மஃதூம் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டதுடன், முதல் பத்து வெற்றியாளர்களுக்கும் ஸஹீஹுல் புஹாரி மற்றும் ரஹீகுல் மஃதூம் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அத்தோடு சரியான விடைகளை எழுதிய அனைவருக்கும் ரஹீகுல் மஃதூம் என்ற புத்தகம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாகக்; கலந்து கொண்ட அஷ்ஷெய்க் றஸ்மி ஷாஹித் அமீனி மற்றும் அல்ஹாஜ் ஹாரூன் ஆகியோர் வெற்றியாளர்களுக்கான பரிசில்களை வழங்குவதையும், முதல் மூன்று வெற்றியாளர்களுடன் அல்ஹிக்மா ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாக உறுப்பினர்களையும் படங்களில் காணலாம்.