நாட்டின் அடுத்த பிரதம மந்திரி சஜித் பிரேமதாச தான் என்பதில் சந்தேகம் இல்லை.- அப்துல்லா மஹ்ரூப்


எப்.முபாரக்-

ந்தளாயில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று(3) மாலை கந்தளாய் குணவர்த்தன மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:

நாட்டின் அடுத்த பிரதம மந்திரி சஜித் பிரேமதாச தான் என்பதில் சந்தேகம் இல்லையென முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும்,திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேற்பாளருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
இன்று நாட்டு மக்கள் எந்த அரசாங்கத்தின் ஆட்சி சிறந்தது என இனங்கண்டு கொண்டார்கள் அதன்படியே அடுத்த பிரதமர் சஜித்துக்கே என கூறுகின்றேன்.
இன்று நாடு ராஜபக்சாக்களின் பைகளுக்குள்ளே இருக்கின்றது அவர்கள் நினைத்ததை மேற்கொள்கின்றார்கள் அமைச்சரவையில் எந்தவொரு அனுமதியும் இன்றி நாட்டினை கொண்டு செல்கின்றார்கள்.
நாட்டின் சிறந்த ஆட்சியை கொண்டு செல்வதற்கு சிறந்த தலைவர் என்றால் அது சஜித் பிரேமதாசவை தவிர வேறும் யாருமில்லை.
நாடு செல்கின்ற நிலையில் ஒரு பொதுத் தேர்தலை சந்திக்கின்றது
இவ்வேளையில் நாம் அனைவரும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து நாட்டில் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு பிரதமருக்கான சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -