நுவரெலியா மாவட்டத்தில் உள்ளவர்கள் எவ்வித தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடாது மக்களை ஏமாற்றுகிறார்கள். நுவரெலியா மாவட்ட தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் கே.ஆர் கிசான் தெரிவிப்பு.




ஹட்டன் கே. சுந்தரலிங்கம் -

நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் எவ்வித தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடாது நாங்கள் ஆட்சி;க்கு வந்தால் அதை செய்து தருகிறோம் இதை செய்து தருகிறோம் என்று கூறியே காலம் காலமாக மக்களை ஏமாற்றி வந்துள்ளார்கள். இன்று அதை தான் இவர்கள் 50 வருடமாக பாடும் பாட்டு என்னத்தை செய்யப்போகிறார்கள்.தயவு செய்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ஒரு அத்திவாரம் இல்லாமல் வீடுகட்ட முடியாது. இவர்கள் அத்திவாரமே போடாமல் எங்கு வீடுகட்ட போறார்கள்.என நுவரெலியா மாவட்ட தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் கே.ஆர் கிசான் தெரிவி;த்தார்.

தோட்ட வைத்தியர்களுடள் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவர்களிடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை தொலைநோக்கும் இல்லை.இவர்கள் மீண்டும் மக்களை ஏமாற்றுவதைத்தான் செய்யப்போகிறார்கள்.

மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.உங்களுக்கு தெரியும் தோட்ட மக்களின் சம்பளம் முதல் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு , வீடமைப்பு , கல்வி , சுகாதாரப்பிரச்சினை இன்று தோட்டங்களில் குளவிகொட்டி பலர் இறக்கின்றனர்.

இவை அனைத்திற்கும் காரணம் இவர்களிடம் வேலைத்திட்டமின்மை.இன்றும் அரிசி அல்லது சாராயம் அல்லது எதையோ கொடுத்து வாக்களிக்கசொல்லுகிறார்கள்.

இன்று தோட்டங்கள் பிரத்தியேக கம்பனிகளிடம் இருந்து எடுத்து தனியார் மயமாக்கப்படுகிறது.இருபது முப்பது வருடமாக பேசப்படும் சம்பளம் இன்னும் கொடுக்கப்படவில்லை பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கின்றது என்கிறார்கள் நாங்கள் ஜெனீவா வரை சென்று சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தை செய்துள்ளோம்.இளைஞர் யுவதிகள் 24000 பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

இதில் உயர்தரப்பரீட்சை சித்தியடைந்தவர்கள் 18000 பேர் பட்டதாரிகள் 301 பேர் இவர்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.வீடு காணியில்லாமல் ஏராளமானோர் இருக்கின்றார்கள்.குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாமல் சிறுநீரகம் பாதிக்கப்பட்டோர் நிறையபேர் இருக்கின்றனர்.இதை எதையும் பற்றி இவர்கள் ஒரு சிறு அறிவித்தலிலும் குறிப்பிடவில்லை எங்களுக்கு வாக்கு தாருங்கள் நாங்கள் ஏதாவது செய்து தருகிறோம் என்கிறார்கள்.

இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. இவர்களுக்கு கிடைத்த பொருளாதார பிரதியமைச்சு,பொருளாதார ராஜாங்க அமைச்சு,சுகாதார பிரதியமைச்சு, கல்வி இராஜாங்க அமைச்சு,தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு, விவசாயத்துறை அமைச்சு, நீதித்துறை அமைச்சு என்று 10 மிகப்பெரிய அமைச்சுகளை இரண்டு மாகணசபைகளில் எடுத்து 20 வருடங்களில் செய்யாத ஒன்றையா நாளை செய்யப்போகிறார்கள்.ஒரு அமைச்சர் கேட்கிறார் என்னை அமைச்சராக்குங்கள் நான் எல்லாம் செய்து தருகிறேன் என்று அப்போது இதுவரைக்கும் என்ன செய்தார்.

அதனால் மக்கள் தான் திருந்தவேண்டும் மக்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் நாங்கள் அல்ல.

நாங்கள் ஒரு நல்ல முயற்சியுடன் பல வேலைத்திட்டங்களுடன் பொருளாதார அபிவிருத்தி ,இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு அபிவிருத்தி,தோட்ட சுகாதார அபிவிருத்தி, தோட்ட வைத்திய அதிகாரிகளுக்கு ஒரு சிறப்புரிமையை பெற்றுத்தரல்,வீடமைப்பு திட்டம் போன்ற வேலைத்திடடங்களை முன்வைத்;துள்ளோம்.

நாங்கள் கங்காரு சின்னத்தில் களமிறங்கியுள்ளோம் எங்களை வெற்றிபெறச்செய்வதன் மூலம் நீங்கள் வெற்றிபெறுவேர்கள்.அவ்வாறு இல்லாது இந்த பழைய அரசியல்வாதிகளுக்கு வாக்களித்தால் நீங்கள் ஏமாறத்தான் போகிறீர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -