முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனை ஆளுந்தரப்பு நெருக்குதலுக்கு உள்ளாக்குவது மனவேதனையளிக்கிறது. முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை இந்த தேர்தல் காலங்களில் விசாரனைகள் கைது செய்யப்பட முனைவது போன்ற நெருக்குதல்களை ஆளுந்தரப்பில் இருந்து ஏற்படுத்துவது பெரும் மன வேதனை அளிப்பதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை தொகுதி அமைப்பாளருமான ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (20) கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துரைக்கையில் வட கிழக்கில் அதிக ஆசனங்களை பெறுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் இடம் பெறும் போது முன்னால் அமைச்சரை கைது செய்ய முற்படுகிறார்கள் பொலிஸ் மா அதிபர் பாராளுமன்றத்துக்கு குற்றமற்றவர் என அறிக்கையை முன்வைத்த போதும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விசாரனைகள் என அவர் மீது அப்பட்டமான பாய்ச்சுதலை பழி சுமத்துகிறார்கள் இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் தேர்தல் காலங்களில் நெறுக்குதல்களுக்கு உள்ளாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும் .
தொல் பொருள் செயலணி என்ற போர்வையில் குறித்த செயலணியில் தமிழ் முஸ்லிம் இனத்தை சேர்ந்த எவரும் நியமிக்கப்படாமை சிறுபான்மை மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது தமிழ் முஸ்லிம் களை நியமித்தால் கிழக்கில் சுபீட்சமான எதிர்காலத்தை காண முடியும் காணி அபகரிப்பு சிறுபான்மை இனத்தின் இருப்புக்களை பாதுகாக்க புதிய வியூகங்களை நாம் கையாள வேண்டியுள்ளது இற்றைய நிலையில் சிறுபான்மை சமூகம் கிழக்கில் பெரும் கேள்விக்குறிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -