சிறுநீரக கற்கள் அறிகுறிகளும் தடுப்பு முறைகளும்...கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவு.

சிறுநீரகக் கற்கள்

சிறுநீரகக்கல் என்பது சிறிய படிகங்களை கொண்ட ஒரு திடப்பொருள் ஆகும். சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீரகக்குழாயிலோ ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கற்கள் இருக்கும்.

காரணங்கள்

சில பொருட்களினால் சிறுநீர் அடர்கரைசலாகும் போது சிறுநீரகக் கற்கள் தோன்றலாம். சிறுநீரில் காணப்படும் இந்த பொருட்கள் சிறிய படிகங்களை உண்டாக்கி, அவை கற்களாக மாறலாம். சிறுநீர் கற்கள் உண்டாகி சிறுநீரகக் குழாய் வழியாக கீழே இறங்கும் வரை எந்த அறிகுறியையும் ஏற்படுத்தாது. சிறுநீரகக் கற்கள் சிறுநீர் குழாய் வழியாக கீழ்நோக்கி நகரும்போது வலியினை ஏற்படுத்தும். இவ்வலியானது, அடிக்கடி பின்புற விளாவின் இரண்டு பக்கங்களிலும் ஆரம்பித்து கீழ்நோக்கி நகரும்.

கற்களின் வகைகளாவன

கால்சியம் கற்கள் அதிகமாக ஏற்படக்கூடியவை, அவை இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக ஆண்களுக்கு ஏற்படும். சாதாரணமாக 20 வயது முதல் 30 வயதுடையவர்களுக்கு ஏற்படும். திரும்பத் திரும்ப ஏற்படும் தன்மையுடையது. கால்சியம் பிற பொருட்களான ஆக்ஸலேட் (மிக அதிகளவிளான பொருள்), பாஸ்பேட் அல்லது கார்போனேட் போன்றவையுடன் சேர்ந்து கற்களை உண்டாக்கும்.

யூரிக் அமில கற்கள் - இவைகளும் அதிக அளவில் ஆண்களுக்கு ஏற்படும்.
ஸ்ட்ருவைட் கற்கள்- (மெக்னீஸியம் அமோனியம்/ பாஸ்பேட் படிகங்களால் ஏற்படும் கல்) என்பது முக்கியமாக பெண்களில் சிறுநீர் குழாய் சம்பந்தமான தொற்று நோய் கண்டதினால் ஏற்படக்கூடியவை. அவை மிகப்பெரியதாக வளரக் கூடியவை. மேலும் சிறுநீரகங்கள், சிறுநீர்குழாய் அல்லது சிறுநீர் பையில் அடைப்பை ஏற்படுத்தக் கூடியவை.

அறிகுறிகள்

  • விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி.
  • குமட்டல், வாந்தி.
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
  • சிறுநீர் அளவு அதிகரித்தல்.
  • சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்.
  • அடிவயிற்றில் வலி.
  • வலியோடு கூட சிறுநீர் கழித்தல்.
  • இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல்.
  • ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி.
  • சிறுநீரின் நிறம் இயற்க்கைக்கு மாறாக காணப்படுதல்.

எப்பொழுது மருத்துவ நிபுனரை அணுகலாம்?

சிறுநீர்கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளோ, சிறுநீரக கற்கள் திரும்பத்திரும்ப ஏற்படுவதற்கான அறிகுறிகளோ, சிறுநீர் கழிப்பது வலியுடன் கூடியதாக இருந்தாலோ, அனுதினம் வெளியேற்றப்பட்ட சிறுநீரின் அளவு குறைந்தாலோ, அல்லது பிற புதிய அறிகுறிகள் தோன்றினாலோ மருத்துவரை அணுகலாம்
தடுப்பு முறைகள்

சிறுநீரக கற்கள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பின், அதிக அளவு தண்ணீர் உட்கொள்ளுதல் அவசியம். பொதுவாக ஒரு நாளைக்கு 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்கச் செய்ய வேண்டும். சிறுநீரக கற்களின் தன்மையை பொருத்து மருத்துவரின் ஆலோசனையின் படி, மருந்தோ அல்லது பிற முறைகளையோ கையாண்டு, கற்கள் திரும்பத் திரும்ப ஏற்ப்படுவதை தடுக்கலாம்.

நீடித்த நாட்பட்ட சிறுநீரகக் கோளாறு / செயலிழப்பு

நாட்பட்ட சிறுநீரகம் செயலிழப்பு அல்லது கோளாறு என்பது சிறுநீரகமானது உடலின் கழிவு பொருட்களை வெளியேற்றும் தன்மை, அடர் கரைசலான சிறுநீரினை வெளியேற்றும் தன்மை மற்றும் உடலில் உள்ள தனிமப்பொருட்கள் சிறுநீரில் வெளியேறாமல் தடுத்து பாதுகாக்கும் தன்மை போன்றவற்றை படிப்படியாக இழந்து, செயல் அற்ற தன்மை அதிகரிப்பதாகும்.

காரணங்கள்
சிறுநீரகங்களை பாதிக்கும் நோய்கள்
வருடக்கணக்கில் சிறுநீரகங்களின் உள்ளமைப்புக் கூறுகள் சேதமடைதல்
சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம்

நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பினால் உடலில் திரவம் மற்றும் தேவையற்ற வீணான பொருட்கள் சேர்ந்து இவை இரத்தத்திலும் அளவில் அதிகரிப்பதினால் அசோடிமியா மற்றும் யூரிமியா ஏற்படுகிறது. அசோடிமியா என்பது எந்த அறிகுறியும் இன்றி இரத்தத்தில் யூரியா போன்ற நைட்ரஜன் பொருட்கள் அதிகரிப்பதாகும். யூரிமியா என்பது சிறுநீரகங்கள் செயல் இழப்பதினால் ஏற்படக்கூடிய ஆரோக்கிய குறைவு ஆகும்.
அறிகுறிகள்

ஆரம்ப நிலையில் ஏற்படும் அறிகுறிகளாவன
  • உடல் எடை இழப்பு
  • வாந்தி
  • பொதுவான உடல்நலக்குறைவு
  • சோர்வு
  • தலைவலி
  • அடிக்கடி ஏற்படும் விக்கல்
  • உடல் முழுக்க ஏற்படும் அரிப்பு (ப்ரூரைட்டிஸ்)

பின் நிலைகளில் ஏற்படும் அறிகுறிகளாவன

  • வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு கூடுவது அல்லது குறைவது
  • இரவு நேரத்தில் சிறுநீர் கழிப்பது
  • சுலபமாக காயம் ஏற்படுதல் அல்லது இரத்தம் வடிதல்
  • வாந்தியில் அல்லது மலத்தில் இரத்தம் காணப்படுதல்
  • மந்தமான துாங்கி விழுகிற நிலமை, சுறுசுறுப்பின்மை, குழப்பம், சித்தபிரமை, நினைவற்ற நிலை
  • தசை துடிப்பு அல்லது தசை இழுப்பு
  • தோலில் வெள்ளைநிற படிகங்கள்
  • கைகள், பாதங்கள் மற்றும் பிற பகுதிகளில் உணர்வு திறன் குறைதல்

நோயுடன் தொடர்புடைய மற்ற கூடுதல் அறிகுறிகளாவன

  • அதிக அளவில் இரவு நேரங்களில் சிறுநீர் கழித்தல்
  • அதிக தாகம் ஏற்படுதல்
  • தோல் நிறம் வெளிர்ந்து காணப்படுதல்
  • நகங்கள் ஒழுங்கின்றி காணப்படுதல்
  • சுவாசம் நாற்றம் எடுத்தல்
  • உயர் இரத்த அழுத்தம்
  • பசியின்மை
எப்பொழுது மருத்துவ நிபுணரை அணுகுவது?


தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் குமட்டல் அல்லது வாந்தி இருப்பின் மருத்துவரை அணுகலாம். அன்றாடம் வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு குறைந்தாலோ அல்லது நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கான அறிகுறிகள் தோன்றினாலோ மருத்துவரை அணுகலாம்
தடுப்புமுறை

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவினை மற்றும் இரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்துவதின் மூலமும் புகை பிடிக்கும் வழக்கத்திலிருந்து விலகியிருப்பதன் மூலமும் நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதினை தடுக்கலாம்.

ஆதாரம் : பத்மா கிட்னி சென்டர்

இன்று ஏராளமானோர் இதன் அறிகுறிகள் தெரியாது கஸ்டப்படுவதனை நாம் பார்க்கிறோம்.
எனவே அவர்களும் இது விடயத்தில் அரிந்து கொள்ள உங்கள் பேஸ்புக் பக்கத்தில் இதனை செயார் செய்து விடுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -