மருதூர் பிரிமியர் லீக்" வென்றது மருதூர் சாலேன்சர்ஸ் அணி


எம்.என்.எம்.அப்ராஸ்-
யோன் குறூப் கம்பனியின் அனுசரனையில் மருதூர் ஸ்போர்ட்ஸ் லீடர் கழகம் நாடத்தும் "மருதூர் பிரிமியர் லீக்" கடின பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் வெற்றியாளராக மருதூர் சாலேன்சர்ஸ் அணியினர் தனதாக்கிக்கொண்டனர்.
குறித்தப் போட்டியின் இறுதிப் போட்டியானது சாய்ந்தமருது
வொலிவோரியன் பொது விளையாட்டு மைதானத்தில்
மருதூர் ஸ்போர்ட்ஸ் லீடர் கழகத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ஹகீம் சரீப் தலைமையில் (26 )நடைபெற்றது.
இவ் இறுதிப் போட்டியானது மருதூர் ஸ்டைகர்ஸ் மற்றும் மருதூர் சாலென்ஞர்ஸ் ஆகிய அணிகள்இடையே இடம்பெற்றது
மட்டுப்படுத்தப்பட்ட 15 ஓவர் கொண்ட இவ் போட்டியானது
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மருதூர் ஸ்டைகர்ஸ் அணியினர் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தனர்.
முதலில் துடுப்படுத்தாடிய மருதூர் சாலென்ஞர்ஸ் அணியாணது 15 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மருதூர் ஸ்டைகர்ஸ், அணியானது 15ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இப்போட்டியில் மருதூர் சாலென்ஞர்ஸ் அணியினர் 35 ஓட்டங்களால் வெற்றிபெற்று மருதூர் பிரீமியர் லீக் சுற்று தொடரை கைப்பற்றிக்கொண்டனர். போட்டியின் ஆட்டநாயகனாக மருதூர் சாலென்ஞர்ஸ் அணியின் வீரர் எம்.ஐ. எம்.ரிபான் தெரிவானார்.

சுற்று தொடரை தனதாக்கி கொண்ட அணிக்கு தலா 20,000 ரூபா பணிப்பரிசும் கிண்ணமும் வீரர்களுக்கு பதக்கமும் அதிதிகளால்
வழங்கிவைக்கப்பட்டது.
இரண்டாவது இடம் பெற்று கொண்ட ஸ்டைகர்ஸ் அணிக்கு 10,000 ரூபா பணப் பரிசும் மற்றும் கிண்ணங்களும்,பதக்கமும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டது. சாய்ந்தமருது பகுதியில் உள்ள முன்னனி 12 கழகங்களை ஒன்றினைத்து அதில் மருதூர் லயன்ஸ், மருதூர் பைடர்,மருதூர் சாலேன்ஞ்சர்ஸ், மருதூர் நைட் ரைடரஸ், மருதூர் வொரியஸ், மருதூர் ஸ்டைகர்ஸ், என ஆறு கழகங்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டியாக இப்போட்டிகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மாயோன் முஸ்தபா அவர்கள் கலந்து சிறப்பித்தார்
கௌரவ அதிதியாக இலங்கை 19 வயதிக்குட்பட்ட மாகாண அணி கிரிக்கெட் வீரர் ஆகில் இன்ஹாம் மற்றும் மேலும் பலர் அதிதிகளாக இதன்போது கலந்து கொண்டனர். மேலும் இதன் போது அதிதிகள் கலந்து கொண்டவர்கள் பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டனர் .

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -