தென் இலங்கை வாழ் முஸ்லிம்கள் சிங்கள சமூகத்துடன் இணைந்து வாழ்வதே மிகப்பொருத்தம் வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ்

ஐ.ஏ. காதிர் கான்-
ட கிழக்குக்கு வெளியே வாழும் தென் இலங்கை வாழ் முஸ்லிம்கள், இன்றைய சூழ் நிலையில் சிங்கள சமூகத்துடன் இணைந்து வாழ்வதே மிகப்பொருத்தமாகும் என, கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் ஏ.எல்.எம். பாரிஸ் தெரிவித்தார்.

எலமல்தெனியவில் உள்ள பொதுஜன பெரமுனவின் பிரதான கட்சிக் காரியாலயத்தில் உடுநுவர தொகுதியைச் சேர்ந்த ஐ.தே.க. வின் 67 பேர், வேட்பாளர் பாரிஸுக்கு இம்முறை தேர்தலில் ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே வேட்பாளர் பாரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கும்போது,

தற்போது சிங்கள மக்கள் மனதில் நிறையவே மனமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மன மாற்றம் முஸ்லிம்களாகிய எங்களிடமும் வரவேண்டும். இன்று நாங்கள் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று கதைக்கும் போது, அவர்கள் எங்களுடன் நேரடியாகவே மனம் திறந்து பேசுகிறார்கள். இந்நிலைமை நாட்டிலும் எங்கள் உள்ளங்களிலும் தொடர்ந்தும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசையாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, பெரும்பாலான முஸ்லிம்கள் தவறிழைத்ததைப் போன்று, இம்முறை வரும் பொதுத்தேர்தலிலும் தவறிழைக்கக்கூடாது. இதனால், சிங்கள மக்களின் பார்வைகள் வேறு திசைக்குச் செல்லலாம். முஸ்லிம்கள் தொடர்ந்தும் இனத்துவ அரசியளுக்குப் பின்னால் செல்லக்கூடாது. இவ்வாறு முயற்சித்தால் அவர்களும் இனத்துவ அரசியலைக் கையில் எடுத்தால், அதில் பாதிக்கப்படப்போவது முஸ்லிம் சமூகம்தான் என்பதையும் மிகக்கவலையோடு தெரிவித்துக் கொள்கின்றேன். இதனை முஸ்லிம்கள் இம்முறை கருத்தாளத்துடன் சிந்தனை செய்ய வேண்டும்.

கண்டி மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் ஆளும் கட்சியான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளனர். எதிர்க் கட்சியில் உள்ள சிறுபான்மைப் பிரதி நிதித்துவங்களை ஆதரிப்பதில் எவ்விதமான பயனுமில்லை. இதனால் எதனையும் சாதித்துக்கொள்ள முடியாது. இவர்களே முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கலாம் என்ற மனோ நிலையில் சிறுபான்மையின மக்கள் உள்ளனர். இம்முறை ஆளும் தரப்பிலிருந்து கண்டி மாவட்டத்தில் சிறுபான்மைப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் முஸ்லிம்கள் முன்வந்துள்ளனர். இதனை சந்தோசமான விடயமாக நான் காண்கின்றேன். இது சிறந்ததொரு மாற்றத்திற்கு வழிகோலுவதாகவும் உள்ளது. இம்முறை வெற்றிபெறும் கட்சியாக பொதுஜன பெரமுன இருப்பதால், அதிலுள்ள முன்னணி வேட்பாளர்கள் பலர் இலட்சக்கணக்கில் விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொள்வார்கள். இம்முறை ஏழு அல்லது எட்டு ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் கணிசமான அளவு வாக்குகளை வழங்க உள்ளனர் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -