திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயலுக்குச் சென்ற நபயொருவருக்கு காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய், சீனி ஆலை பகுதியைச் சேர்ந்த ஆரியசேன வயது 59 என்பவரே யானைத்தாக்குதலில் பலியாகியுள்ளார்.
நேற்றிரவு(14) வயலுக்கு காவலுக்குச் சேன்ற நிலையிலே காட்டு யானை ஒலிந்திருந்து தாக்கியதில் பலியாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.