அம்பாறை மாவட்ட விவசாயிகளின் காணிகளை பாதுகாக்க அரசுக்கு நெருக்கமான அதாஉல்லாவை வெற்றிபெற செய்யுங்கள் : சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ்.


நூருல் ஹுதா உமர்-
பாராளுமன்றத்தில் உணவருந்தவும், தூங்கவுமே செல்லும் நம்மவர்கள் கையில் அதிகாரத்தைக் கொடுத்து விட்டு கடந்த காலத்தில் நாம் ஏமாற்றமடைந்தவற்றையும் கைசேதப்பட்ட நாட்களையும் நாங்கள் எமக்கு பாடமாக எடுக்கவேண்டும். தொலைபேசிக்கு வாக்களித்து மீண்டுமொரு தயாகமகே போன்ற இனவாத தலைமைகளை உருவாக்கி அம்பாறை மாவட்டத்தை ஆட்சி செய்ய விவசாயிகளான நாம் ஒருபோதும் இடங்கொடுக்கக்கூடாது என தேசிய காங்கிரஸின் கொள்கை அமுலாக்கள், சட்டவிவகார செயலாளரும் பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் அக்கட்சியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ் தெரிவித்தார்.
நேற்று (14) மாலை மாவடிப்பள்ளியில் நடைபெற்ற விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் தனது உரையில் மேலும்,

அம்பாறை மாவட்ட விவசாயிகள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சிந்திக்கும் நேரத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். எமது அம்பாறை மாவட்டத்தின் பொருளாதார மேம்பாட்டில் விவசாயத்திற்கும் பாரிய செல்வாக்கு இருக்கிறது. நாம் எமது தேவைகளுக்காக பெரும்பாலும் தங்கியிருக்கின்ற விவசாயத்திற்கும் , விவசாயிகளுக்கும் சார்பானவரை, தனது அதிகாரத்தின்மூலம் விவசாயத்துக்கு உதவக்கூடியவரையே நாம் இந்த காலகட்டத்தில் பிரதிநிதியாக தெரிவு செய்யவேண்டும்.

எமது மாவட்டத்தில் காணிப்பிரச்சினைகள் அதிகமாக இருக்கிறது. அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு நிரந்தரமாக பெறப்பட வேண்டும். அதனை வேற்றிகரமாக செய்ய ஆளுமையும் திறனையும் உள்ள ஒருவராக முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா மட்டுமே அம்பாறை மாவட்டத்தில் உள்ளார். அவரை நாம் இம்முறை சரியாக பயன்படுத்த வேண்டும்.

கடந்த காலங்களில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள் அதிகாரத்தில் இருந்தபோது எமது பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட விவசாயத்தின் தேவைகளுக்கான உதவிகளுக்கும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் அவர்கள் அதிகாரமில்லாமல் இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட விவசாய மேம்பாட்டு உதவிகளுக்கும் இருந்த வித்தியாசத்தையும் எமது தேவைகளை அடையவும் அதிலிருந்த சிரமங்களையும், தடைகளையும் எதிர்கொள்ளவும் இருந்த சிக்கல்களையும் நாம் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் உணவருந்தவும், தூங்கவுமே செல்லும் நம்மவர்கள் கையில் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு கடந்த காலத்தில் நாம் ஏமாற்றமடைந்தவற்றையும் கைசேதப்பட்ட நாட்களையும் நாங்கள் எமக்கு பாடமாக எடுக்கவேண்டும். தொலைபேசிக்கு வாக்களித்து மீண்டுமொரு தயாகமகே போன்ற இனவாத தலைமைகளை உருவாக்கி அம்பாறை மாவட்டத்தை ஆட்சி செய்ய விவசாயிகளான நாம் ஒருபோதும் இடங்கொடுக்கக்கூடாது.
பாடல்களுக்கும், மண்வெட்டிகளுக்கும் சோரம் போகி உணர்ச்சிக்கு அடிமையாகி, மக்களை ஏமாற்றும் எமது முன்னாள் தலைமைகளின் போலிப்பிரச்சாரங்களால் கவரப்பட்டு நாங்கள் அடைந்த நஷ்டங்கள் போதும். இவர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளால் எமது தலையில் தாமே மண்ணை அள்ளிக்கொட்டும் முட்டாள் தனத்தை ஒருபோதும் செய்துவிடமுடியாது. எமது பிரதேசத்தின் வயல் வளத்தை பாதுகாப்பதற்காகவும், இறைவன் வழங்கிய விவசாய நிலங்களை கொண்டு நாம் வளர்ச்சி காணவும் தேசிய காங்கிரஸின் கரத்தை பலப்படுத்த எங்களின் ஆளுமையான வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -