தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் அல்-ஹாஜ் எச். தாலிப் அலி தெரிவு.


எப்.முபாரக்-
ம்பலகாமம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் அல்-ஹாஜ் எச். தாலிப் அலி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு. என். மணிவண்ணன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.தென்னக்கோன் மற்றும் தம்பலகாமம் பிரதேச சபை செயலாளர் எஸ்.நிர்மலநாதன் ஆகியோரின் தலைமையில் இன்று(20) பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தம்பலகாமம் பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.டபிள்யூ.ஜீ.சம்பிக்க அவர்கள் முன்மொழிய உறுப்பினர் எம்.ஐ.றிகாஸ் அவர்கள் வழிமொழிந்து தம்பலகாமம் பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் அல்-ஹாஜ் எச்.தாலிப் அலி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

தம்பலகாமம் பிரதேச சபையின் உறுப்பினர்களின் ஏகோபித்த அங்கீகாரத்துடன் அல்-ஹாஜ் எச்.தாலிப் அலி அவர்கள் தெரிவுசெய்யப்பட்டது சிறப்பம்சமாகும். அத்துடன், அல்-ஹாஜ் எச்.தாலிப் அலி அவர்கள் நான்கு தடவைகள் தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை தம்பலகாமம் பிரதேச அரசியல் வரலாற்றுச் சாதனையாகும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான.

ஏ.டபிள்யூ.ஜீ.சம்பிக்க, ஆர்.எம்.குடா பண்டா, பி.எம்.டபிள்யூ.குணரத்ன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களான ஆர்.எம்.றெஜீன், ஹமீட் றஹீம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான எம்.ஐ.றிகாஸ் அஹமட், எம்.எஸ்.றெஷீன் கான், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான தன்சூல் அலீம், ஏ.ஏ.அஸ்வர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான விஜயானந்தம் விஜயகுமார், கே.பாலச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் பிரகலாதன் பிரபு ஆகியோர் அல்-ஹாஜ் எச்.தாலிப் அலி அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களான எம்.வை.இமாம்தீன் மற்றும் திருமதி எஸ்.பரீதா உம்மா ஆகியோர் புதிய தவிசாளர் தெரிவினை பகிஷ்கரித்து சபைக்கு சமூகமளிக்கவில்லை.
இந்நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப்பும் கலந்து கொண்டிருந்தார்.

மேலும், தம்பலகாமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எம்.சுபியான் அவர்கள் பொதுத் தேர்தல் வேட்பாளராக விடுமுறையில் உள்ளதனால் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -