கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு பாதுகாப்பு சுகாதார உபகரணங்கள் வழங்கல்



பாறுக் ஷிஹான்-
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து எம்மை பாதுகாக்கும் பொருட்டு சிறுவர் , முதியோர், புனர்வாழ்வு பெற்றோர், விஷேட தேவையுடையோர், மகளீர் இல்லங்களில் தங்கியிருப்பவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் செயற்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகத்தின் கொவிட் 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான செயலணிக்கூடாக பாதுகாப்பு சுகாதார உபகரணங்கள் இன்று (20) வழங்கி வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தின் சனாதிபதி செயலணி யின் இல்லங்களுக்கான இணைப்பாளர் வீ.பரமசிங்கம், மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர் யூ.எல்.அஷார்தீன்,சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ரீ.மதியழகன் , கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் அருட்தந்தை எஸ்.டீ.வினோத்,மனித மேம்பாட்டு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.எல்.நிஹால்,மாவட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய தினம் காலை கல்முனை மெதடிஸ்த சிறுமியர் இல்லத்தில் உள நல மருத்துவ முகாம் வைத்தியர் ஷரப்தீன் தலைமையில் தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் இணைந்து சிறுமியர் உள நல மேம்படுத்த மருத்துவ முகாம் நடைபெற்றிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -