நூருல் ஹுதா உமர்-
தேசிய காங்கிரஸின் சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, பாலமுனை பிரதேசங்களுக்கான தேர்தல் கிளைக் காரியாலயங்கள் திறந்துவைக்கும் நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை மாலை தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய காங்கிரஸில் சார்பில் குதிரை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், போராளிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.