அனுஷா சந்திரசேகரன் வாகனம் மீது தாக்குதல்...

தலவாக்கலை பி.கேதீஸ்-

லையக மக்கள் முன்னணியின் தலைவர் கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணனுக்கு எதிராக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையம், நுவரெலிய மாவட்ட பொலிஸ் காரியாலயம், தேர்தல் ஆணையகம் என்பவற்றில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக சட்டத்தரணியும் நுவரெலியா மாவட்ட சுயேட்சை வேட்பாளரும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தனது அடியாக்களை வைத்து நான் கூட்டங்களுக்கு செல்லும்போது எனது வாகனங்களை வழிமறித்து தாக்குதல் நடத்த தொடங்கியிருக்கின்றார். நேற்று 13.7.2020 இரவு நான் அக்கரப்பத்தனை பகுதியில் தேர்தல் பிரச்சாரம் முடித்துவிட்டு வரும் வழியில் என்னுடைய வாகனத்தை மறித்து தாக்க முற்பட்டு இப்போது என்னுடைய ஆட்கள் தாக்கியதாக பொய் புகார் அளித்து என்னுடைய ஆதரவாளர்களை அவமானப்படுத்துகிறார்.

 நான் இதனை ஒருபோதும் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டேன். எனக்கு மக்களின் ஆதரவு பெருகி வரும் நிலையில் அடியாட்களை கொண்டு நான் கலந்துகொள்ளும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை குழப்புவதற்காக பல முயற்சிகள் மேற்கொண்டு வரப்பட்ட போதிலும் அவை தோல்வியடைய தற்போது நான் பயணிக்கும் வாகனத்தை வழிமறித்து பலவந்தமாக தேர்தல் பிரச்சாரங்களை இடை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றனர். பெரியசாமி சந்திரசேகரன் எனும் மாபெரும் தலைவனின் புதல்வியாக இருக்கும் நான் ஜனநாயக ரீதியிலேயே அரசியல் செய்கின்றேன். நான் யாரையும் விமர்சித்தோ அவதூறு கூறியோ அரசியல் நடத்தவில்லை. அது எனது தந்தையின் கொள்கையும் இல்லை எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -