வருமானம் இல்லாத மக்களிடம் இருந்து நிதி அறவீடு செய்து ஆலயங்கள் அமைக்கப்படுகின்ற நிலை மாற வேண்டும் :அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன்


நூருல் ஹுதா உமர்-
ந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் காரைதீவு பிரதேச எல்லைக்குட்பட்ட இந்து சமயத் தலைவர்கள் மற்றும் அற நெறி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (19) இடம் பெற்றது.

இந்நிகழ்வில் வளவாளராக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் அவர்களும், அம்பாறை மாவட்ட செயலக இந்து காலாசார அபிவிருத்து உத்தியோகத்தர்கள் கே.ஜெயராஜி, என்.பிரதாப் அவர்களும், காரைதீவு பிரதேச இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகர், காரைதீவு பிரதேச எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களின் அறங்காவலர்களும், இந்து சமய அறநெறி பொறுப்பாசிரியர்களும் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வளவாளராக கலந்து கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் விளக்கமளிக்கையில் வசதி படைத்தவர்களிடம் இருந்து நிதியை பெற்று வருமானம் குறைந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதனையே ஒரு காலத்தில் ஆலயங்கள் மேற்கொண்டன. ஆனால் இன்று வருமானம் இல்லாத மக்களிடம் இருந்து நிதி அறவீடு செய்து ஆலயங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த நிலை மாற வேண்டும். முடிந்தவரை ஆலயங்கள் மக்களின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்றார். இந்நிகழ்வில் எதிர்காலத்தில் ஆலயங்கள் மேற்கொள்ள கூடிய திட்டங்கள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -