ரிஷாத்தின் தேர்தல் பணிகளை மழுங்கடித்து, அவரை தோக்கடிக்க சதிகள் நடக்கின்றன - அமீர் அலி


எச்.எம்.எம்.பர்ஸான்-

முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்துவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத் தேர்தலில் தோக்கடிக்க சதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி - மீராவோடையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

எமது கட்சித் தலைவர் ரிஷாத் பதியூதீனை தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள விடாமல் அவரை சீ.ஐ.டி விசாரணைக்காக தினம் தினம் அழைக்கின்றனர். காலையில் ஒருதடவை, மாலையில் ஒருதடவை என்று ஒவ்வொரு நாளும் விசாரணைக்காகச் சென்று வருகிறார்.

அவர் மாத்திரமல்லாமல் அவரது சகோதரர்கள், மனைவி, தாய் தந்தை என்று சீ.ஐ.டி யினர் விசாரித்து வருகின்றனர். இவ்வாறு பந்தாடப்படும் அரசியல் வாதியாக ரிஷாத் காணப்படுகிறார். இவ்வாறு பந்தாடப்படும் அரசியல் வாதிகள் இலங்கையில் யாரும் கிடையாது.

ரிஷாத் பதியூதீனின் குரல்வளை நசுக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் அவரது குரல் பாராளுமன்றத்தில் ஒலித்தால் அது பௌத்த மக்களுக்குப் பிரச்சினையா இருக்கும். பௌத்த மக்களை எங்களால் சமாளிக்க முடியாமல் போகும் எனும் காரணங்களுக்காகவே தேர்தல் காலங்களிலே அவரை விசாரணைக்கு அழைத்து சம்பந்தப்படாத கேள்விகள், சம்பந்தப்படாத விடயங்கள் போன்றவற்றை துருவித் துருவி ஆராய்ந்து அவரது தேர்தல் பணிகளை மழுங்கடித்து அவரைத் தோக்கடிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற நாடகம் என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -