பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகளின் முதற்கட்டம் இன்று ஆரம்பமான நிலையில், மலையகத்திலும் சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி, அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றது.
தபால்மூல வாக்களிப்புக்காக விண்ணப்பித்திருந்த சுகாதார பணியாளர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் உட்பட அனைத்து சுகாதார தரப்பினருக்கும் இன்று வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
வாக்களிப்புக்காக ஒதுக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களில் காலை 9.00 மணிக்கு, சுகாதார ஏற்பாடுகளுக்கு மத்தியில் வாக்களிப்பு ஆரம்பமானது. மாலை 4மணிவரை இடம்பெறவுள்ளது.
காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், தேர்தல் கண்காணிப்பாளர்களும் வருகைதந்துள்ளனர்.
இதேவேளை நாளை (14) மற்றும் நாளை மறுதினங்களில் (15) அரச பணியாளர்களுக்கும், 16ஆம் 17ஆம் திகதிகளில் பொலிஸார் மற்றும் முப்படையினரும் தபால் மூலம் வாக்களிக்க முடியும். இவ் திகதிகளில் வாக்களிக்க தவறும் வாக்காளர்கள் 20ஆம், 21ஆம் திகதிகளிலும் தபால் மூலம் வாக்களிப்புக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.