கொரோனா முடிந்த பிறகு 97 லட்சம் மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல மாட்டார்கள் - சேவ் தே சில்ட்ரன் எச்சரிக்கை


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ் -
கொரோனா வைரஸ் பிரச்சினை முடிந்த பிறகு உலகம் முழுவதும் 97 லட்சம் பிள்ளைகள் மீண்டும் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்று சேவ் தே சில்ட்ரன்‘ தொண்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லண்டனை தலைமையிடமாக கொண்டு உலகம் பூராகவும் செயல்படும் ‘சேவ் தே சில்ட்ரன்‘ தொண்டு நிறுவனம், கொரோனா வைரஸ் சூழ்நிலையில் கல்வியில் ஏற்படும் பாதிப்பு குறித்து ஒரு ஆய்வு நடத்தியுள்ளது. அதன் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

கொரோனா வைரஸ்காரணமாக ஊரடங்கு சட்டம் நிலவுவதால், உலகம் முழுவதும் 160 கோடி மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் உள்ளனர். 

கொரோனா வைரஸ் பிரச்சினையால் உலகம் முழுவதும் வறுமை அதிகரிக்கும். கல்விக்கு அரசாங்கங்கள் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கும் தொகையும் குறையும். இதனால், ஊரடங்கு சட்டம் முடிந்த பிறகு மாணவர்கள் பாடசாலைக்கு திரும்ப செல்லாமல் இருக்கும் ஆபத்து, யெமன், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் 12 நாடுகளில் அதிகமாக இருக்கும். 

மேலும், 28 நாடுகளில், இந்த ஆபத்து அதிகமாகவோ அல்லது மிதமாகவோ இருக்கும். மொத்தத்தில், உலகம் முழுவதும் 97 லட்சம் மாணவர்கள், மீண்டும் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். இது, முன் எப்போதும் இல்லாத கல்வி நெருக்கடி நிலை.

அடுத்த 18 மாதங்களில், ஏழை நாடுகளில் கல்விக்கு செலவழிக்கும் தொகை $77 Billion ( சுமார் 14 லட்சம் கோடி ரூபா ) குறையும். இப்படி வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீட்டை குறைப்பதால், ஏழை-பணக்காரர் இடையிலான வேறுபாடு இன்னும் அதிகரிக்கும்.

பாடசாலைகள் மூடியுள்ள காலத்தில், பெண் குழந்தைகள், பாலியல் வன்முறைக்குள்ளாவது அதிகரிக்கும். குழந்தை திருமணங்கள், சிறுவயது கர்ப்பங்கள் ஆகியவையும் உயரும்.

கல்விக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை போக்க உலக நாடுகளும், நன்கொடையாளர்களும் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்க வேண்டும். அத்துடன், ஏழை நாடுகள் கடனை திரும்பச் செலுத்துவதை நிறுத்தி வைக்க கடன் கொடுத்தவர்கள் முன்வர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -