திருகோணமலை சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 423 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது


எப்.முபாரக்-
திருகோணமலை சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 423 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் இன்று(22) கைது செய்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லங்கா பட்டுமக,பள்ளிக்குளம,பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் பாணந்துறையிலிருந்து வியாபார நடவடிக்கைக்காக திருகோணமலை சூரியபுர பகுதிக்கு சென்ற நிலையிலே சந்தேக நபர் தொடர்பாக சூரியபுர பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 423 மில்லிகிராம் ஹேரொயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸர் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நாளைய தினம்(23) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -