மல்வத்தை ஆரம்ப வைத்தியப் பிரிவு 23 வருடங்களாக தரமுயர்த்தப்படாதது ஏன்? கிராமமக்கள் கேள்வி ?

ரவி கிருஷ்ணபிள்ளை மல்வத்தை-

ம்பாரை மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கிராமங்களில் ஒன்றான மல்வத்தைக்கிராமம், கால காலமாக எல்லா வகையிலும் கவனிப்பார் அற்ற கிராமமாகவே காணப்படுகின்றது.

இம்மல்வத்தைக் கிராமத்தைச் சூழ புதுநகரம், கணபதிபுரம், தம்பிநாயகபுரம், திருவள்ளுவர்புரம், மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி, புதிய வளத்தாப்பிட்டி, ஹிஜிராபுரம், மஜீட்புரம், 26ஆம் காலனி போன்ற 10 மேற்பட்ட கிராமங்களைக் கொண்டது. இங்கு மூவின மக்களும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்..

இந்த கிராம மக்களின் வைத்தியச் தேவையைப் பூர்த்திசெய்ய ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப வைத்தியப் பிரிவு 23 வருடங்களைக் கடந்தும் எந்தவித தரவுயர்வும் இல்லாமல் அதே நிலையில் இருப்பது மிகவும் வேதனையான விடையமாகும்.

இங்கு நிரந்தர வைத்தியரும் இல்லை தாதியரும் இல்லை இரவு நேரத்தில் அவசர நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்க எந்த வசதியும் இல்லை. அத்துடன் அவசர சிகிச்சைகாக தொலைவில் உள்ள அம்பாரை, அல்லது சம்மாந்துறை, வைத்தியசாலைகளையே இம்மக்கள் நாடவேண்டியுள்ளது. தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக மட்டும் படையேடுக்கும் அரசியல்வாதிகள் இம்மக்களின் குறைகளைக் கேட்டறிந்தும் இதுவரை எந்தவித ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர்..

சுமார் 10000 இற்கும் மேற்ப்பட்ட மக்கள் வாழும் மல்வத்தை உட்பட சுற்றவரையுள்ள கிராமங்களின் மிகவும் அத்தியாவசிய தேவையாகிய இந்த வைத்தியசாலையை “C” தர பிரதேச வைத்தியசாலையாக மாற்றி ஒரு நிரந்தர வைத்தியரும் தாதியும் தங்கி இருந்து சேவை செய்யக்கூடிய வகையில் தரமுயர்த்தப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகக் காணப்படுகின்றது. 

அண்மையில் ஆரம்ப மருந்துப் பராமரிப்பு நிலையமாக இருந்த வான்எல கிராம வைத்தியசாலை “C” தர வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனவே இது சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நடவடிக்கை எடுத்து இந்த வைத்தியசாலையை தரமுயர்த்தி மக்களின் அத்தியாவசிய தேவையை நிவர்த்தி செய்ய சுகாதார சேவை அமைச்சு மற்றும் அதிகாரிகளிடம் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -