மலையகத்தில் பிறப்பு வீதம் குறைந்துள்ளது.-இராதகிருஷ்ணன்


ன்று மலையகத்தில் பிறப்பு வீதம் குறைந்துள்ளது. குழந்தைகளின் மந்த போசணம் அதிகரித்துள்ளது.இப் பிள்ளைகளின் பிரச்சினைகள் தீர்க்கப் பட வேண்டும்.முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் இராதகிருஷ்ணன் தெரிவிப்பு
எம்.ஏ.முகமட்-
னக்கலவரம்,மதக்கலவரம் போர் வன்முறை போன்ற செயல்களால் அதிகம் பாதிக்கப்படுவது ஒன்றுமறியாத அப்பாவி குழந்தைகளும். பெண்களும் தான். போரின் போது பள்ளிக் கட்டிடங்களே குறிவைத்து தாக்கப்படுகின்றன. அது மட்டும்மல்லவா வறுமையிலும் குழந்தைகள் பாதிக்கின்றனர் என்று கூறுகின்றார். உலக ஆக்கிரப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மலையக மக்கள் முன்னணியின் தலைரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் தொடர்ந்து அவரது அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:-

இன்று இலங்கை மலையகத்தில் குழந்தைகளின் பிறப்பு வீதம் குறைந்துந்துள்ளது. குழந்தைகளுக்கு மந்த போஷணம் அதிகரித்து வருகின்றது. மலையக குழந்தைகளின் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். பாடசாலைகளில் சத்தணவுத்திட்டம் அனைவருக்கும் கிடைக்க அரசு புதிய திட்டங்களை முன் வைக்க வேண்டும். மலையகத்தில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தல், பாலியல் துஸ்பிரயோகம் காரணமாகவும் குழந்தைகள் நாளாந்தம் பாதித்து வருகின்றனர். இதற்கு எல்லாம் தீர்வு காணப்பட வேண்டும்.

ஐ.நா.வின் முடிவுப்படி 1984-ஆம் ஆண்டிலிருந்து ஆக்கிரமிப்பால் பலியான ஒன்றுமறியாத குழந்தைகள் தினம் ஜூன் 4ஆம் தேதி இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த விடயம் மலையகத்தில் எத்தனை பேருக்கு தெரியும். மலையகத்தில் யுத்தம் நடைபெறாவிட்டாலும் இனக்கலவரம் உட்பட பலவேறு காரணங்களினால் குழந்தைகள் நாளாந்தம் பாதிப்படைந்து வருகின்றனர். இதில் இருந்து நாமும் குழந்தைகளை பாதுகாப்போம் என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -