பழைய மாணவர் சங்கம் அதிரடியாக கலைப்பு!


காரைதீவு நிருபர் சகா-
ம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) பழைய மாணவர்சங்கம் கலைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் எ.சி.எம்.எ. இஸ்மாயில் தெரிவித்தார்.

பாடசாலையில் கடந்த 2018.06.17ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட பழைய மாணவர் சங்கம் (PPA) என்கின்ற அமைப்பு 2020.06.16ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் கலைக்கப்படுகிறது என பாடசாலையின் முகாமைத்துவக்குழு தீர்மானித்துள்ளது.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் கலைக்கப்பட்டுள்ளதனால் மிக விரைவில் புதிய நிர்வாகத்தைத் தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம் நடாத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே கடந்த இரண்டு வருடங்களும் செயலாளரும் பொருளாளரும் தங்களது அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்கு தயாராக வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அத்தோடு இவ்வமைப்பிற்குரிய தங்களிடமுள்ள ஆவணங்கள் பொருட்கள் அனைத்தையும் பாடசாலை முகாமைத்துவக்குழுவிடம் ஒப்படைக்குமாறும் அறியத்தருகின்றேன்.

கடந்த இரண்டு வருடங்களாக பல திட்டங்களுக்கு மத்தியில் இயங்கிய பழைய மாணவர் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுக்கும் ஏனைய அங்கத்தவர்களுக்கும் அவர் தமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்.
மேலும் Whatsup குழுமம் மற்றும் சமூக வலைத்தளங்களினூடாகவும் செயல்பாடுகளையும் இவ்வறிவித்தலின் பின்னர் இயங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -